கொலஸ்ட்ராலை குறைக்கும் பானங்கள்: உலக அளவில் கொலஸ்ட்ரால் பிரச்சனை மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாகி விட்டது. பெரும்பாலும் இது ஒரு எதிர்மறையான, அச்சுறுத்தும் உடல் நிலை கோளாறாகவே கருதப்படுகின்றது. ஆனால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, கொலஸ்ட்ரால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும், அதன் அளவு அதிகமானால், அது பல கடுமையான நோய்களுக்கு காரணமாகிறது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க பலர் பல வித முயற்சிகளை மெற்கொள்கிறார்கள். எனினும், மிக எளிய, இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதற்கான வழி நமது தினசரி உணவிலேயே உள்ளது. அதிக கொலஸ்ட்ராலை தவிர்க்க உதவக்கூடிய அப்படிப்பட்ட சில பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக கொலஸ்ட்ராலை தவிர்க்க 8 ஆரோக்கியமான உணவுகள்
கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் காணப்படும் மெழுகு போன்ற பொருளாகும். இது ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகரிக்கிறது. பின்னர் நரம்புகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் காரணமாக, தமனியில் இரத்த ஓட்டத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும். கொலஸ்ட்ராலால் அதிக பிரச்சனை ஏற்படாமல் இருக்க, உங்கள் தினசரி உணவில் இந்த 8 விஷயங்களைச் சேர்க்கவும்.
1. தக்காளி சாறு
லைகோபீன் என்ற சத்துக்கள் தக்காளியில் காணப்படுகின்றன. இது உங்கள் உடலில் லிப்பிட் அளவை மேம்படுத்துகிறது. தக்காளிச் சாற்றில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் நியாசின் இருப்பதால், தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | தினம் ஒரு எலுமிச்சை போதும்... நோய்கள் உங்களை அண்டாது!
2. பெர்ரி ஸ்மூத்தி
பெர்ரி ஸ்மூத்தியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இந்த பானங்கள் ஆரோக்கியமானதாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
3. ஓட்ஸ் பானம்
ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் பீட்டா குளுக்கன்கள் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. ஆகையால் கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் ஓட்ஸ் ட்ரிங்க்ஸ் குடிப்பது நல்லது.
4. கிரீன் டீ
கிரீன் டீயில் கேடசின்கள் மற்றும் பிற ஆண்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. இது ஆரோக்கியமற்ற கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
5. சோயா பால்
சோயா பால் மூலம், தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கலாம். தினமும் குறைந்தது 25 கிராம் சோயா பால் உட்கொள்ள வேண்டும்.
6. பீட்ரூட் சாறு
பீட்ரூட்டில் உணவு சார்ந்த் நைட்ரேட்டுகள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. மறைமுகமாக கொலஸ்ட்ரால் அளவைப் கட்டுக்குள் கொண்டு வருகின்றன.
7. ஆரஞ்சு சாறு
ஃபிரஷ்ஷாக பிழிந்த ஆரஞ்சு சாற்றில் ஹெஸ்பெரிடின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவுகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
8. எலுமிச்சை சாறு
காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றை குடிப்பது நீரேற்றத்துடன் இருக்க உதவும். வைட்டமின் சி அளவை வழங்கவும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் வழியாகும். இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர்.. குடிச்சு பாருங்க, அசந்து போவீங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ