காலை உணவை இப்படி சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும்

Diabetes Food: நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  இந்த உணவுகளை உட்கொள்ளவது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2022, 05:58 PM IST
  • நீரிழிவு நோயால், உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகிறது
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம்
  • நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
காலை உணவை இப்படி சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும் title=

சென்னை: நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எழும். இந்த உணவுகளை உட்கொள்ளவது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கலாம். 
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது என்பதால், அவர்கள் உணவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்தக் கட்டுப்பாட்டை, காலை உணவிலேயே தொடங்க வேண்டும். காலை உணவாக சில உணவுகளை உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவை நாள் முழுவதும் சமப்படுத்த உதவும். அதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு நோயின் பிற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவும். எனவே, இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படுவதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும். 

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான காலை உணவு  
முளை கட்டிய வெந்தயம்
நீரிழிவு நோயாளிகளுக்கு முளை கட்டிய வெந்தயம் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் உயர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, குளூக்கோசை ஜீரணிக்க உதவும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் முளைகட்டிய வெந்தயம் கொண்டுள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சூப்பர் பிரேக்ஃபாஸ்டாக இருக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

பனீர்
பச்சை பனீரில் நல்ல அளவு புரதம் உள்ளது, ஆனால் கார்போஹைட்ரேட் இல்லை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் பனீர், ரத்த சர்க்கரையை அதிகரிக்காது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். எனவே காலை உணவில் பனீர் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் தங்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு நீண்ட நேரம் பசியை அடக்கும்.  இதனுடன், நீரிழிவு நோயாளிகள் எந்த நேரத்திலும் சாப்பிடக்கூடிய குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவும் இதுவாகும். எனவே, ஓட்ஸ், புட்டிங் அல்லது ஓட்ஸ் ஸ்மூத்திஸ் செய்து காலை உணவாக சாப்பிடலாம், இது உடலுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்

சியா விதைகள்
சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதில் உள்ள நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. சியா விதைகளை ஊறவைத்து, காலையில் ஸ்மூத்தியாக சாப்பிடவும். கிச்சடி மற்றும் கஞ்சியாகவும் செய்து சாப்பிடலாம்.

முருங்கைக்காய் சூப்
நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை சூப் மிகவும் நன்மை பயக்கும். இந்த சூப் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உட்கொள்ளலாம். இது நீரிழிவு நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News