சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் எலுமிச்சை...எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

Diabetes: எலுமிச்சை சாறு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது, இதனை நீங்கள் 5 எளிய முறைகளில் பயன்படுத்த நன்மை பெறலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2022, 06:20 AM IST
  • எலுமிச்சையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுவதற்கான வழிகள் உள்ளது.
  • எலுமிச்சை குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளது.
  • தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவது சிறந்தது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் எலுமிச்சை...எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? title=

Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் கவலையான ஒன்று உணவு கட்டுப்பாடு தான், இந்நோய் வந்துவிட்டாலே பல அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என்று பலவித உணவு கட்டுப்பாடுகள் இருக்கும்.  அந்த வகையில் வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுவதற்கான வழிகள் உள்ளது.  எலுமிச்சையை நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  எலுமிச்சையில் வைட்டமின்-சி, நார்சத்து, ஆன்டி-இன்ப்ளமேட்டரி, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.  எலுமிச்சை குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளதால் இது அனைத்துவிதமான நபர்களுக்கும் சிறந்த பலனளிக்கிறது.  இதில் நார்சத்து நிறைந்துள்ளதால் இது ஜீரண சக்தியை தூண்டுவதாக அமைகிறது.

Teeth Staining Home Remedies: Teeth Whitening Tips

மேலும் படிக்க | TEA Tips: உங்களுக்கு டீ பிடிக்கலாம்: ஆனால் தேநீருக்கு இந்த பொருட்களை பிடிக்காது

அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிடுவது, நீங்கள் தினமும் எலுமிச்சையை சேர்த்துக்கொள்வதற்கான எளிதான வழியாகும்.   அரிசி முதல் கறி, பாஸ்தா வரை எந்த உணவிலும் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கலாம்.  இது உணவுக்கு ஒரு நல்ல சுவையையும் நறுமணத்தையும் தருகிறது, மேலும் எலுமிச்சையை சாலட்களில் கலந்து சாப்பிடுவது கூடுதல் சுவையை தருகிறது.  தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவது சிறந்தது, இந்த பானத்தை தயாரிப்பதும் எளிது.  தண்ணீரை மிதமான வெப்பநிலையில் வைத்துக்கொண்டு, அதில் அரை எலுமிச்சை சாறை சேர்க்கவும்.  எலுமிச்சை நீரைத் தயாரிக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்தாமல் இருக்கலாம், மேலும் இதில் சர்க்கரை அல்லது பிற இனிப்புகளைச் சேர்க்காமல் இருப்பது கூடுதல் நன்மையை அளிக்கும்.

எலுமிச்சம் பழத்துண்டுகளைக் வைத்து டீடாக்ஸ் ட்ரிங்க் தயாரிக்கலாம், இந்த டிடாக்ஸ் நீரை நாள் முழுவதும் பருகிக்கொண்டே இருப்பதால், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. எலுமிச்சை சாறு சேர்க்க மற்றொரு ஆரோக்கியமான வழி சாலட், இது சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.  சாலட்டில் மிதமான அளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் போதும், அதிகப்படியான எலுமிச்சை அமிலத்தன்மையை உருவாக்கும் என்பதால் அதை மிதமான அளவில் சாப்பிடுங்கள்.  மாவுசத்து நிறைந்த அரிசி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் மற்றும் சோளம் போன்ற உணவுகளில் எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம்.  இது உடலில் ஆரோக்கியமான சமநிலையை தூண்டி ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது.

மேலும் படிக்க | Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News