மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!

கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2022, 05:19 PM IST
  • கொலஸ்ட்ரால் உடலுக்கு பெரும் ஆபத்து
  • மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது
  • கொலஸ்ட்ரலை கட்டுப்பத்தும் உணவுகள்.
மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!  title=

 

கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். அதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும்

நம் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள், செல்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை உருவாவதற்கு நல்ல கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம். அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. 

இரத்தத்தின் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்கிறது, இதன் காரணமாக அவர்களின் தமனிகளில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும் அல்லது ரத்தம் ஓட்டத்திற்கு தடையாகவோ மாறும்.  ரத்த ஓட்டம் தடை படும் போது மாரடைப்பு ஏற்படலாம். எனவே கொலஸ்ட்ராலை குறைக்க கீழ்கண்ட உணவுகளை அவசியம் சேர்க்கவும்.

1. ஓட்ஸ்
ஓட்ஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, புரதம் மற்றும் சர்க்கரை உள்ளது. அதிக நார்ச்சத்து இருப்பதால், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு இதய தசைகள் வலுவடையும்.

2. ராஜ்மா
 ராஜ்மா சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. எனவே, உணவில் கண்டிப்பாக ராஜ்மாவை சேர்த்துக்கொள்ளுங்கள். பருப்பு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சிறந்த நார்ச்சத்து பருப்பு வகைகளில் உள்ளது.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள்

3. மீன்

மீனில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும். ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதுடன், இரத்தத்தில் உள்ள பீட்டா-அமிலாய்டு புரதத்தின் அளவையும் குறைக்கிறது.

4. அக்ரூட் பருப்புகள்

ஒரு கைப்பிடி அளவு அக்ரூட் சாப்பிட்டால் அதன் பலன்களை நான்கு மணி நேரத்திற்குள் பார்க்கலாம். இது உங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் நரம்புகளை மேலும் நெகிழ்வாக மாற்றவும் உதவுகிறது. பாதாமை உட்கொள்வதினால் கூட உங்கள் உடலில் இரத்த ஓட்டம் எளிதாகிறது. ஆளிவிதை கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடுவதில் பெரும் பங்களிப்பை அளிக்கும்.  உலர்ந்த பழங்களையும் பயன்படுத்தலாம். அவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி நல்ல ஆற்றலையும் தருகின்றன.

5.அன்சாச்சுரேட்டட் கொழுப்பு

ஆலிவ், சூரியகாந்தி, நிலக்கடலை, சோயாபீன் மற்றும் ஆளி விதை எண்ணெய் போன்ற அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ள உணவுகளைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

6. பச்சை காய்கறிகள்

புதிய பச்சை காய்கறிகளை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். பச்சைக் காய்கறிகளில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர  அனுமதிக்காது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.)

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News