நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். இவை இல்லாமல், சிறிய செல்கள் இறக்கத் தொடங்கி, இறுதியில் மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்றவையும் சேதமடைகின்றன. ஆகையால் இரத்தம் அதன் இயல்பான வேகத்தில் ஓட, அவை செல்லக்கூடிய நரம்புகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். நமது இரத்த ஓட்டத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் சமநிலை நமது இருதய அமைப்பின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
"கெட்ட கொழுப்பு" என்று பொதுவாக அறியப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (எல்டிஎல்) கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். ஆகையால் இதய ஆரோக்கியத்தில் கொழுப்பின் தாக்கங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கொலஸ்ட்ரால் தமனி சுவரில் பிளேக் போன்ற படிவுகளை உருவாக்கி, தமனியை குறுகலாக்கி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.
எல்டிஎல் கொழுப்பு
சில உணவுகள் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இது ஒரு ஒட்டும் பொருளாகும். இது நரம்புகளைத் தடுக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் நின்று மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். பதப்படுத்தப்பட்ட உணவு, அதிகமாக வறுக்கப்பட்ட உணவு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்-நெய், சுத்தமற்ற வெண்ணெய், சிவப்பு இறைச்சி ஆகியவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது.
அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறிகள்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உடலில் எந்த அறிகுறிகளும் நேரடியாகத் தெரிவதில்லை. ஆனால் நரம்பு வலி, கை, கால்களில் உணர்வின்மை, மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருப்பதைக் குறிக்கின்றன.
மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!
ஹை கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான இயற்கையான வழிகள்:
பூண்டு
ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 பற்கள் பூண்டு சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது தவிர, நரம்புகளை அடைக்கும் அழுக்குகளை குறைக்க இது உதவுகிறது.
ஆளி விதைகள்
ஆளிவிதைகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதங்களை குறைக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் ஆளி விதையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகிறது.
வேப்ப இலைகள்
வேம்பில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு கூறுகள் உள்ளன. இது அழுக்கு கொலஸ்ட்ராலை நீக்கி நரம்புகளை சுத்தம் செய்ய உதவுகிறது. 2-3 வேப்ப இலைகளை சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
வெந்தயம்
காய்கறிகளின் சுவையை அதிகரிக்க வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நார்ச்சத்து உட்பட பல ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டுள்ளது. 1 தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலனைத் தரும்.
ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஆப்பிள் வினிகரை 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதயம் - மூளை இரண்டையும் காக்கும்... தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ