சிறுநீரக கல் - அறிகுறிகள்: சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். அது பழுதடைந்தால் ஒரு நபரின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது என்று கூறப்படுகிறது. நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அவற்றுக்கான பணிகளை செய்கின்றன. உதாரணமாக, மூளை, வயிறு, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றுக்கென பிரத்யேக பணிகள் உள்ளன. இவற்றில் ஒன்று பழுதடைந்தாலும், வாழ்வது கடினமாகி விடுகின்றது. இன்றைய காலகட்டத்தில், தவறான வாழ்க்கை முறை காரணமாக, சிறுநீரக கல், ஒற்றைத் தலைவலி, சிறுநீரக டயாலிசிஸ் போன்ற கடுமையான நோய்களுக்கு இரையாவது எளிதாகி விட்டது.
உடலின் வெளிப்புறத்தில் காயம் அல்லது எரிச்சல் ஏற்படும் போது, நாம் எளிதாக அதை அறிந்து கொள்ளலாம். ஆனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பழுதடைகிறதா என்பதை எப்படி கண்டறிவது? சிறுநீரகத்தில் கல் உருவானால், உடலில் என்னென்ன அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Health Alert: 'இந்த' பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் வேண்டாமே..!!
முதுகு, வயிறு மற்றும் கைகளில் வலி
சிறுநீரக கல் பிரச்சனை இருக்கும் போது, சாதாரண வலியுடன் ஒப்பிடும்போது உடலில் பல்வேறு வகையான வலிகள் ஏற்படும். சிறுநீரக கல் சிறுநீர் பாதையில் இருந்து வெளியே வர முயற்சிக்கும் போது, திடீரென கடுமையான வலியும் திடீரென அமைதியான உணர்வும் ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு அழுத்தம் அதிகமாகிறது. இதன் காரணமாக முதுகு மற்றும் வயிற்றில் பயங்கர வலி உணரப்படுகிறது.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
உங்கள் சிறுநீரக கல் உங்கள் சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பையில் நுழைந்தால், சிறுநீர் கழிக்கும் போது வலியை உணரலாம். அப்படிப்பட்ட வலி உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் வயிற்றில் சிறுநீரக கல் இருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை யுடிஐ என்று நீங்கள் நினைக்கலாம். சிறுநீரக கற்களாலும் தொற்று பரவும்.
சிறுநீரில் இரத்தம்
நாம் தொற்றுநோய்களின் பிடியில் வரும்போது, அதனால் நமது சிறுநீரில் மாற்றங்களைக் காண்கிறோம். வைரஸ் காரணமாக சிறுநீர் அதிக மஞ்சள் நிறமாக மாறுவது போல, இன்சுலின் அளவு காரணமாக சிறுநீரின் நிறம் மாறுகிறது. ஆனால் உங்கள் வயிற்றில் கல் இருந்தால், உங்கள் சிறுநீர் பாதையில் இரத்தம் வருவதற்கான அறிகுறி ஏற்படும். இது சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் ஒரு கிவி பழம் செய்யும் மாயம்: ஆரோக்கிய மாயஜாலம் செய்யும் கனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ