தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைப்பது: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் அவ்வளவு முக்கியம்தான். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி சில இயற்கையான வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைப்பது உண்மையில் ஒரு பெரிய பணியாகும். ஆனால் விஞ்ஞானிகளின் சில எடை இழப்பு குறிப்புகள் மூலம் இதை எளிதாக்கலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், உடலுக்கு வலியை கொடுக்காமல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்கும் இயற்கையான, எளிய சில வழிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி?
சாமானியர்களின் வாழ்வு இலகுவாவதற்கு விஞ்ஞானிகள் இரவும் பகலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மக்களை பாடாய் படுத்தும் எடை அதிகரிப்புக்கும் இவர்கள் சில குறிப்புகளை கண்டறிந்துள்ளனர். சில ஆராய்ச்சிகள் மூலம் எடை இழப்புக்கான பயனுள்ள வழியைக் கண்டறிந்துள்ளனர். இவை வலியை ஏற்படுத்தாமல் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
இந்த விஷயத்தை குறைத்துக்கொள்ளவும்
வயிற்று கொழுப்பை அகற்ற சர்க்கரை அல்லது இனிப்பு பானங்களை முற்றிலும் கைவிட தேவையில்லை. நீங்கள் அதன் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தினால் போதும். அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் வயிற்று கொழுப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் இனிப்பு உட்கொள்ளலில் அதிகப்படியான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | பூண்டுக்குள் பூகம்பம்: பூண்டு அதிகமானால் ஆபத்துங்க.... ஜாகிரதை!!
அதிக புரதம் உட்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க, புரத உணவு உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த ஊட்டச்சத்தை ஜீரணிக்க உடல் அதிக நேரம் எடுக்கும். இதனால் பசியின் மீது கட்டுப்பாடு இருக்கும். பசி உணர்வு இல்லையென்றால், அதை கட்டுப்படுத்த அதிக சிரமம் எடுக்க வேண்டி வராது.
உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும்
உடல் எடையை குறைகக் நினைப்பவர்கள் சர்க்கரையுடன் கார்போஹைட்ரேட்டுகளையும் குறைவாக சாப்பிட வேண்டும். உணவில் ஒரு நாளைக்கு 50 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதன் மூலம், உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்.
மேலும் படிக்க | தொப்பை வெண்ணெய் போல் கரைய... ‘இந்த’ எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!
நார்ச்சத்துள்ள உணவுகள் எடை இழப்புக்கான சிறந்த வழி
தொப்பை கொழுப்பை அகற்ற வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் சரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு செயல்பாடுகளுக்கும் நார்ச்சத்து உணவுகள் முக்கியம். இதற்கு ப்ரோக்கோலி, ஆப்பிள், கேரட், பருப்பு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்
உடற்பயிற்சியின் பெயரைக் கேட்டாலே மக்கள் ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் சிறிய உடல் செயல்பாடுகள் கூட எடையைக் குறைக்கும். நண்பர்களுடன் நடப்பது, வீட்டில்-அலுவலகத்தில் படிக்கட்டுகளில் ஏறுவது, நீச்சல் அடிப்பது போன்றவை அதிகப்படியான பலன்களை அளிக்கும் .
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடிவயிற்று தொப்பையை சீக்கிரம் குறைக்கணுமா? இரவு உணவில் இவற்றை உண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ