எடை குறைப்பு குறிப்புகள்: முன்பு உடல் பருமன் ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால் மாறிவரும் சூழலில், உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பே ஒரு பெரிய நோயாக உருவெடுத்துள்ளது. உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தின் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை செய்கிறார்கள்.
ஜிம் செல்வது, பல வித உடற்பயிற்சிகளை செய்வது, உணவு கட்டுப்பாடு, என பல வித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனினும் சில சமயம் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் தேவையான முடிவுகளை பெற முடிவதில்லை.
உடல் பருமன் உடல்நலனுக்கு பல தொல்லைகளை அளிக்கின்றது. அதே போல் பல கொடிய நோய்களையும் வரவழைக்கிறது. எனினும், உடல் பருமனை குறைப்பது அத்தனை கடினமான விஷயமும் அல்ல. உங்களால் ஜிம் செல்ல முடியவில்லை அல்லது டயட்டில் இருக்க முடியவில்லை என்றால், உங்கள் தினசரி வழக்கத்தில் சில சிறிய மாற்றங்களைச் செய்து உடல் பருமனில் இருந்து விடுபடலாம். இந்த வைத்தியம் மிகவும் எளிதானது. சிறிய நடவடிக்கைகள் மூலம் உடல் எடை குறைப்பில் மிகப்பெரிய பலன்களை பெறலாம்.
உடல் எடையை குறைக்க உதவக்கூடிய சில எளிய உதவிகுறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பகலில் அதிக தண்ணீர் குடிக்கவும்:
தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள், தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இது உடலின் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பு சீராக்குகிறது. கோடையில் நீரிழப்பு விரைவில் ஏற்படும். ஆகையால் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். மிக விரைவிலேயே அதன் விளைவு தெரியும். விரைவில் உங்கள் எடை குறைவதை நீங்கள் காண்பீர்கள்.
காலை உணவு அவசியம்
ஒரு நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க, காலை உணவு மிகவும் முக்கியமானது. பலர் மிகவும் பிஸியாக இருப்பதால், அவசரத்தில் காலை உணவை மறந்துவிடுவார்கள். அல்லது தேநீர் குடித்துவிட்டு வெளியேறி விடுவார்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவை தவறுதலாக கூட தவிர்க்கக்கூடாது. காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலைத் தருவதோடு, வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் மற்ற உணவுப் பொருட்களில் கவனம் செலுத்த மாட்டீர்கள்.
நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க விரும்பினால், காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவு மற்றும் இரவு உணவையும் சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். கனமான காலை உணவு, நடுத்தர அளவிலான மதிய உணவு மற்றும் மிகவும் லேசான இரவு உணவு. இதை சரியாக கடைபித்தால் உடல் பருமன் விரைவில் குறையும்.
மேலும் படிக்க | பச்சைப் பப்பாளியில இத்தனை நன்மைகளா? ’லேடீஸ் ஸ்பெஷல்’ பப்பாளிக்காய்
நொறுக்குத் தீனிகள் வேண்டாம்
ஜங்க் ஃபுட் உங்கள் உடலை குப்பையாக்கும். பீட்சா பர்கர், சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், பேக்கரி பொருட்கள் போன்றவற்றை உங்கள் வாழ்க்கை முறையிலிருந்து அகற்றவும். ஜங்க் ஃபுட் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றில் அதிக கலோரிகள் இருப்பதால், உங்களுக்கே தெரியாமல் உடலில் கொழுப்பு சேரும். ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தினால் உடல் எடையை குறைக்கலாம்.
மதுவிற்கான ஆசையை கைவிடுங்கள்
மதுப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மதுவின் ஆசையை நீங்கள் கைவிட்டால், விரைவில் உடல் பருமன் உங்கள் உடலை விட்டு வெளியேறும். ஆல்கஹால் மற்றும் பிற மதுபானங்களில் உள்ள கலோரிகள் உங்கள் உடல் பருமனை அடுக்கடுக்காக அதிகரிக்கின்றன. ஆகையால், நீங்கள் மது மற்றும் பிற ஆரோக்கியமற்ற பானங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கல் கண்டிப்பாக அதை உடனே துவக்க வேண்டும். இன்றிலிருந்தே அதைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் எடையைக் கட்டுப்படுத்த தினமும் குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுப்படுத்த உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. தினசரி உடற்பயிற்சி உங்கள் கலோரிகளை எரித்து, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால், ஓட்டம், ஜாகிங், நடைபயிற்சி, ஸ்கிப்பிங், படிக்கட்டு ஏறுதல் போன்ற சாதாரண பயிற்சிகளையும் செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெண்ணெய் போன்ற சருமத்திற்கு தர்பூசணி தான் ஒரே தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ