எடையை குறைக்க முயற்சிக்கும்போது, பல்வேறு உணவுப் பொருட்களைத் தவிர்க்கிறோம். டயட் செய்யும்போது எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற கேள்விகள் அதிகம் எழுகிறது. மிகவும் பொதுவான சந்தேகங்களில் ஒன்று பால் எடுத்துக்கொள்வது பற்றியது. பால் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது, ஆனால் பாலில் கொழுப்பு நிரம்பியுள்ளதால், உடல் எடையை குறைக்கும் போது பாலை தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.
பாலில் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) உள்ளது மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. இவை உடல் எடை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் இரண்டு கூறுகளாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 250 மில்லி பாலில் (1 கப்) கிட்டத்தட்ட 5 கிராம் கொழுப்பு மற்றும் 152 கலோரிகள் உள்ளன. குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், பொதுவாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பார்கள்.
ALSO READ | நீங்கள் வாங்கும் பால் கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிப்பது எப்படி..!!
ஆனால் பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா என்பதற்கான பதில் நிச்சயம் தவிர்க்க கூடாது என்பது தான். பால் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. இதில் புரதம் நிறைந்துள்ளது, இது தசையை கட்டமைக்கவும் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. புரதம் மட்டுமல்ல, இதில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி உள்ளது.
இது மட்டுமின்றி, பால் (Milk) உட்கொள்வதன் மூலம், பசியைக் குறைக்கும் ஹார்மோன்களான GLP-1, PYY மற்றும் CCK போன்ற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் பசியை தூண்டும் ஹார்மோனான கிரெலின் (ghrelin) அளவைக் குறைக்கிறது.
பால் உங்கள் எலும்புகளுக்கு நல்லது என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. 250 கிராம் பாலில் 8 கிராம் புரதம் மற்றும் 125 மி.கி கால்சியம் உள்ளது. தேவையான அளவு பால் குடிப்பது எப்போதுமே நல்லது.
ALSO READ | Health Alert! சமைத்த உருளைகிழங்கை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆபத்து.!!
பால் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்தவர்களைக் காட்டிலும் குறைந்தது மூன்று வேளை பாலை உட்கொண்டவர்கள் அதிக எடையைக் குறைத்துள்ளனர் என்பது 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாலில் உள்ள கால்சியம் உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, டைப் -2 நீரிழிவு மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி செய்தால், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உங்கள் உணவில் இருந்து தவிர்க்க வேண்டாம்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR