டெல்லியில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..!
கிழக்கு டெல்லியின் நியூ அசோக் நகரிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ள சிறுமை வீட்டிற்கு வந்த குடும்ப நண்பர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த குடும்பத்தில் உள்ள 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவத்தை அறிந்த அந்த சிருமயின் பெற்றோர் அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், குற்றவாளியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், தனியார் கடையில் பணியாற்றிவரும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.