25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு- அமெரிக்கா கென்டக்கி பல்கலைக்கழகம்

Last Updated : Jun 7, 2016, 06:45 PM IST
25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு- அமெரிக்கா கென்டக்கி பல்கலைக்கழகம் title=

அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் 25 பேருக்கு கணினி பாடம் குறித்த போதிய அறிவு இல்லாததால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்திய மாணவர்கள் 60 பேர் தனியார் நிறுவனங்கள் மூலம் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் 60 பேர் சேர்ந்து படித்து வந்தனர். இவர்களில் 25 பேருக்கு தேவையான கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரும் கணினி குறித்து போதிய அறிவு இல்லை என அத்துறையின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறினார். எனவே அந்த 25 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஒன்று நாடு திரும்ப வேண்டும் அல்லது அங்குள்ள வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் பிரிவுத் தலைவர் ஆதித்யா சர்மா கூறியது:- இது தொடர்பாக வருத்தம் தெரிவித்த அவர் இது மிகவும் துரதிர்ஷ்டமானது எனவும் கூறினார்.

Trending News