அட்சய திரிதியை 2022: புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும். இந்த நாளில்தான் கிருத யுகத்தில் பிரம்ம தேவன் உலகை உருவாக்கியதாக நம்பப்படுகின்றது.
அக்ஷய அல்லது அட்சய என்றால், அழியாத, அள்ள அள்ள குறையாத என்று பொருள். இந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அட்சய திருதியை திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்து மதத்தில் அக்ஷய திரிதியை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நாள் திருமணம், புது மனை புகுதல், புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது, புதிய கலைகளை கற்கத் துவங்குவது, பத்திரப்பதிவு ஆகியவற்ருக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதாவது, இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தையும் நேரம் காலம் பார்க்காமல் செய்யலாம்.
இந்த நாள் முழுவதும் மங்களகரமான வேலைகளைச் செய்வதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை கொண்டடப்படும் நாளும் விசேஷமானது. இந்த முறை அட்சய திருதியை அன்று ஒரு சிறப்பு நிகழ்வும் நடக்கவுள்ளது.
மேலும் படிக்க | Solar Eclipse: சூரிய கிரகணம் முடிந்த உடனே இதை செய்தால் பாதிப்பில் இருந்து விடுபடலாம்
50 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய சுப நிகழ்வு
இந்த முறை அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்தின் ஷோபன யோகத்தில் கொண்டாடப்படும். இத்தகைய மங்களகரமான யோகம் கொண்ட அட்சய திருதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாளில் கிரகங்களின் நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அட்சய திருதியை அன்று சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியிலும், சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியிலும் இருப்பார்கள். இது தவிர, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்திலும், தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீனத்திலும் இருப்பார்கள். அதாவது 4 கிரகங்கள் இப்படி அனுகூலமான நிலையில் இருப்பது மிகவும் விசேஷமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். இந்த சுப சேர்க்கைகளில் சுப காரியங்களைச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்யுங்கள்
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இத்தகைய சுப நிலை காரணமாக, அட்சய திருதியை நாளில் தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். இதனுடன், வாழ்க்கையின் பல அம்சங்களில் இந்த நாளின் சுப பலன்களும் கிடைக்கும். இந்த நாளில் அன்னதானம் செய்வது மிக நல்ல பலன்களை அளிக்கும், சந்ததி தழைக்கும்.
அக்ஷய திருதியை நாளில், தண்ணீர் நிரப்பப்பட்ட கலசத்தில் பழங்களை வைத்து தானம் செய்வது மிகவும் புண்ணியமாகும். இதற்கு 2 கலசத்தை தானமாக வழங்க வேண்டும். ஒன்று முன்னோர்களின் பெயரிலும் மற்றொன்று விஷ்ணுவின் பெயரிலும் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்ருக்கள் மற்றும் விஷ்ணு இருவரும் மகிழ்ச்சியடைந்து, வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, அனைத்திலும் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR