OMG!! சிறந்த இலக்கை விட தனது காதலியின் அணைப்பு தான் சிறப்பு: ரொனால்டோ

34 வயதான ரொனால்டோ தனது சிறந்த இலக்கை விட தனக்கு சிறந்த தருணம் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 19, 2019, 08:43 PM IST
OMG!! சிறந்த இலக்கை விட தனது காதலியின் அணைப்பு தான் சிறப்பு: ரொனால்டோ title=

புதுடெல்லி: உலகம் முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு பொதுவான குணம் இருக்கிறது. நட்சத்திர விளையாட்டு வீரர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம், அவர்களிடம் இருந்து பெரும்பாலான பதில்கள் விளையாட்டை மையமாக வைத்தே இருக்கும். ஆனால் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) வேறுபட்ட கருத்து உள்ளது. அதாவது தனது சிறந்த இலக்கை விட காதலியின் அணைப்பு தான் தனக்கு முக்கியம் என அவர் கூறியுள்ளார். போர்ச்சுல் கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸ் (Juventus) அணிக்காக விளையாடி வருகிறார்.

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது கால்பந்து வாழ்க்கையில் 700-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் மிகவும் கவுரமாகவும், மரியாதையாகவும் கருதப்படும் பாலன் டி ஆர் (Ballon d'Or)  விருதை ஐந்து முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஒரு நேர்காணலில் குறிப்பட்டார், அவர் அடித்ததிலேயே மிகவும் சிறந்த கோல், எந்த அணிக்கு எதிராக என்றால், தற்போது அவர் விளையாடும் அதே அணிக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். அவர் கூறும் சிறந்த கோல் 2018 ஆம் ஆண்டில் யுவென்டஸ் அணிக்காக விளையாடும் போது  ஜுவென்டஸ் அணிக்கு எதிராக ரொனால்டோ அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

34 வயதான ரொனால்டோ தனது சிறந்த இலக்கை விட தனக்கு சிறந்த நேரம் இருந்தது, அது தனது காதலியுடன் கழித்ததாகவும் கூறினார். 2016 முதல் ஜார்ஜினா ரோட்ரிகஸ் (Georgina Rodriguez) உடன் ரொனால்டோ டேட்டிங் செய்து வருகிறார். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். ரொனால்டோவுக்கு மேலும் மூன்று மகன்கள் உள்ளனர்.

Trending News