தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த செய்தி எதுவும் நேற்றைய எபிசோடில் கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யாவுடன் மோதலில் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தீபா ஐஸ்வர்யாவிடம் வாங்கக்கா ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிட அவள் என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும் செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல நான் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள். இந்த விஷயத்தை தீபா மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வருகிறது.
மேலும் படிக்க | பின்னணி இசையே இல்லாமல் உருமாகும் புதிய தமிழ் படம்!
மறுபக்கம் ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர கார்த்திக் இதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வர இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள். என்னை தேடி தேடி வந்து பிரச்சனை செய்கிறாயா என்று கேட்க ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல சரி உனக்கு வேலை போட்டுத் தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு சம்பளம் எவ்வளவு தான் என்று அனைத்தையும் எடுத்து சொல்கிறாள்.
பிறகு மேனேஜரை கூப்பிட்டு இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டென்டா இரு, அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறார். கலகலப்பான மனிதரான மாணிக்கம் நான் உனக்கு வேலை கத்து கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார்.
பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ