நந்திவர்மன் திரைவிமர்சனம்: அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடித்திருக்கும் படம் நந்திவர்மன். இந்த படத்தில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். பெலிக்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். கிரைம் மற்றும் மிஸ்டரி திரில்லர் வடிவில் படம் உருவாகியுள்ளது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமத்தை பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆண்டு வருகிறார். அந்த கிராமம் செல்வ செழிப்புடன் வளமாக இருந்து வருகிறது. இதனை அறிந்து கொண்ட கோரா என்ற கொள்ளையன் அந்த கிராமத்தை அழித்து அனுமந்தீஸ்வரர் கோவிலுக்குள் உள்ள தங்கப் புதையலை அடைய நினைக்கிறார், ஆனால் மன்னன் நந்திவர்மன் கோராவை போரில் தோற்கடித்து தானும் இறந்து விடுகிறார். தற்போதைய காலகட்டத்தில் போஸ் வெங்கட் தலைமையில் அகழ்வாராய்ச்சி குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்ய அந்த ஊருக்கு வருகின்றனர். இதன் பின்பு அந்த ஊரில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. இறுதியில் தங்கப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா? அந்த ஊரில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு யார் காரணம் என்பதே நந்திவர்மன் படத்தில் கதை.
படத்தின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட வரலாற்று கதை நம்பும் படியாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக சுரேஷ் ரவி குரு வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஒரு எஸ்ஐ காண கம்பீரமான உடல் அமைப்புடன் உள்ளார். போஸ் வெங்கட் தலைமையில் அனுமந்தபுரத்தில் அதை கோவிலை பற்றி நடக்கும் ஆரம்பகட்ட அகழ்வாராய்ச்சிகள் சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளது, இது படத்தில் அடுத்த போகிறது என்ற ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. இவர்களை தவிர ஆச வெங்கடேஷ், நிழல்கள் ரவி, ஊர் தலைவராக வரும் கஜராஜ், குடிகாரராக வரும் முல்லை கோதண்டம் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை சுவாரசியமாக இருந்தது, பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். செயோன் முத்துவின் ஒளிப்பதிவு மற்றும் சான் லோகேஸின் எடிட்டிங் படத்திற்கு ஏற்றார் போல இருந்தது. பெருமாள் வரதனின் திரைக்கதை சுவாரசியமாக இருந்தாலும் அதனை படமாக்க பட்ட விதத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். கதையாக கேட்க சுவாரசியமாக இருக்கும் இந்த நந்திவர்மன் ஒரு திரைப்படமாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இதற்கு முக்கிய காரணம் படத்தில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் தான். சண்டை போடுவதில் தொடங்கி கோவிலை காட்டுவது வரை அனைத்து விஎப்எக்ஸ் செய்துள்ளனர் ,இது படத்தை விட்டு நம்மை தள்ளி போக செல்கிறது.
மேலும் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் வேண்டா வெறுப்பாக நடித்தது போல் நடித்துள்ளனர், இதனால் படத்தை நம்மால் கனெக்ட் செய்து கொள்ள முடியவில்லை. மேலும் கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்டும் பெரிதாக எடுபடவில்லை. இருப்பினும் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு நந்திவர்மன் பிடிக்கலாம்.
மேலும் படிக்க | Mathimaran Review: மதிமாறன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ