ஆகஸ்ட் மாதம் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதத்தில் நடக்கப் போகிறது.
வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நடைப்பெறும். இந்த நிகழ்வை நாம் ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்று அழைக்கிறோம்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஆகஸ்ட் மாதம் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்களின் ராசிகளை மாற்றப் போகிறது. பல சுப யோகங்களும் உருவாகும், அதில் குறிப்பாக புதாதித்ய ராஜயோகம், சமசப்தம யோகமும் உருவாகும். அதனுடன் திரிகிரஹி யோகமும் உண்டாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படப் போகும் கிரகங்களின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நேரம் அதிர்ஷ்டமாவும், சாதகமாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுவார். அதன்படி வரும் ஆகஸ்ட் 16 கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் சிம்மத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை நடைபெற்று திரிகிரஹி யோகத்தை உண்டாக்கும்.
ஆகஸ்ட் மாதம், செவ்வாய் தனது ராசியையும் மாற்றுவார். அதன்படி செவ்வாய் ஆகஸ்ட் 26, 2024 அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். ஆகஸ்ட் 5, 2024 அன்று, புதன் சிம்ம ராசியில் வக்கர பெயர்ச்சி அடைகிறார். பின்னர் ஆகஸ்ட் 22 அன்று, அது மீண்டும் சிம்ம ராசியில் கடக ராசியில் பெயர்ச்சி அடைவார். பிறகு ஆகஸ்ட் 29 ஆம் தேதி புதன் முன்னேக்கி பயணிப்பார்.
ஆகஸ்ட் மாதம் பிறப்பதற்கு முன்னதாக ஜூலை 31ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். பின்னர் சுக்கிரன் தனது பயணத்தை சிம்மத்தில் நிறுத்தி ஆகஸ்ட் 25 அன்று கன்னி தொடங்குவார். சுக்கிரன் இந்த ராசியில் 25 நாட்கள் பயணிப்பார்.
ஆகஸ்ட் மாதம் நான்கு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. இதனால் சுப யோகங்கள் உருவாகும். இதன் மூலம் சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். உத்தியோகத்தில் புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். நிதி ஆதாயம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.