ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்...

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் முன் ஒருவர், தவிர்க்க வேண்டிய 5 உணவு வகைகள் குறித்து இங்கு முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

  • Feb 15, 2024, 07:34 AM IST

ஆண், பெண், இளைஞர்கள், மத்திய வயதினர் என பல தரப்பட்ட மக்கள் உடல்பயிற்சி கூடத்திற்கு செல்கின்றனர். அந்த வகையில், அதுகுறித்து அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இருப்பதும் அவசியாமாகிறது.

1 /7

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பலரும் உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்போது அதிகம் செல்கின்றனர். அதில் பயிற்சிபெற்ற நிபுணர்கள் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கவோ, கூட்டவோ ஆலோசனைகள் வழங்கப்படும், அதற்கேற்ப உடற்பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும்.  

2 /7

இருப்பினும், சிலர் உடற்பயிற்சி கூடம் குறித்த தெளிவான புரிதல் இன்றி சென்றுகொண்டிருப்பார்கள். அதனால், அது குறித்து விழிப்புணர்வது அவசியம். அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர் தவிர்க்க வேண்டிய 5 உணவு வகைகள் தொடர்ந்து காணலாம். 

3 /7

காரமான உணவுகள்: சூட்டை கிளப்பும் மற்றும் செரிமானத்தில் பிரச்னை வரும் காரமான உணவுகளை தவிர்க்கவும். இது உடல் வெப்பத்தை அதிகரித்து, அதிக வியர்வைக்கு வழி வகுக்கும்.

4 /7

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஆரோக்கியமற்ற அதிக கொழுப்புள்ள, சர்க்கரை மற்றும் சோடியம் நிறைந்த சிப்ஸ், பிஸ்கட்கள், துரித உணவுகளை சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி செரிமானக் கோளாறை உண்டாக்கும். இதனால், உடல்பயிற்சியே உங்களால் செய்ய முடியாது.   

5 /7

அதிக ஃபைபர் உள்ள உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஃபைபர் தேவையென்றாலும் இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது செரிமான பிரச்னை வரும். எனவே, பீன்ஸ், பருப்பு உள்ளிட்டவற்றையை தவிர்க்கவும். 

6 /7

கார்பனேற்றப்பட்ட பானங்கள்: சோடா மற்றும் இனிப்பிலான பானங்களை குடிக்க வேண்டாம். இதனால் வாயு பிரச்னை வரும். மேலும், உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது.

7 /7

வறுக்கப்பட்ட உணவுகள்: இதிலும் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் எக்கச்சக்கமாக உள்ளதால் இதுவும் செரிமான அமைப்பில் பிரச்னையை ஏற்படுத்தும். வயிறு நிரம்பியது போன்று உணரவைக்கும்.