Guru Peyarchi 2024 in Rohini Nakshatra: கடந்த ஜூன் 13ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இது சுக்கிரனின் அதிபதி நட்சத்திரமாகும். மேலும் இந்த நட்சத்திர பெயர்ச்சி மிகவும் மங்களகரமான யோகத்தில் நடந்துள்ளார். இதனால் மிதுனம், கடகம் உள்ளிட்ட பல ராசிக்களுக்கு பொற்காலமாக அமையும்.
மங்களநாயகனாக நவகிரகங்களில் விளங்க கூடியவர் குருபகவான். அதன்படி இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கொண்டே இருப்பார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பூ கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
மேஷம்: குரு நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல அனுபவங்களை தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கலாம். சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகரமாக முடிவை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்: குரு நட்சத்திர இடமாற்றம் ரிஷப ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் கூடும். சமூகத்தில் மரியாதையும், கௌரமும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்: குரு நட்சத்திர இடமாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை தாகரும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கலாம். பணவரவு உண்டாகும். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். வேலையில் நல்ல சூழல் இருக்கும்.
கடகம்: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை தரும். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செல்வம் பெருகிக் கொண்டே போகும். உடன் பிறந்தவர்களால் வாழக்கை முன்னேற்றம் அடையும். நல்ல இடத்தில் இருந்து வேலை வாய்ப்பு பெறுவீர்கள்.
சிம்மம்: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், அங்கீகாரம் கிடைக்கும். வணிகர்கள் லாபத்தை ஈட்டுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தந்தையுடனா உறவு சிறப்பாக இருக்கும்.
தனுசு: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனை தரும். வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மரியாதை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.