பாம்பு வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. பொதுவாக பாம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் அதன் இரையை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி கொன்று விழுங்கிவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | Video: மறுபிறவி கொடுத்த இளைஞர்... நண்பனாக மாறிய நாரை - பறவையின் பாசப்பிணைப்பு!
இங்கு ஒரு நாகப்பாம்பு உயரமான இடத்தில் நேராக நின்றுக் கொண்டு இருப்பதை நாம் காணலாம். இவ்வளவு பெரிய நாகப்பாம்பு நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது, மற்றும் இந்த நாகப்பாம்பு நின்று இருப்பதை பார்த்தால், அச்சு அசல் மனிதர்கள் நின்றுபதை
போலவே இருக்கிறது.
வீடியோவை இங்கே காணுங்கள்:
சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை We are Malaysians என்கிற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ