பல குற்றச்செய்களில் ஈடுப்பட்டு சீன காவல்துறையிடம் இருந்து தப்பிச் சென்ற அழகியை மெய்ன்யாங்க் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்!
மெய்ன்யாங்க் பகுதியை சேர்ந்த குயிங்சென் ஜிங்ஜிங் (19 வயது) எனும் இளம்பெண்ணை கடந்த 12 நாட்களாக சீன காவல்துறையினர் தேடி வந்தனர். பிரபல நட்சத்திர விடுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டுவரும் கும்பளில் முக்கிய குற்றவாளியாக ஜிங்ஜிங் இருந்துள்ளார், இதன் காரணமாக சீன காவல்துறை இவரை தேடி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த குற்றச்செயலுக்கு பின்னர் சீன காவல்துறை அதிகாரிகள், ஜிங்ஜிங் புகைப்படம் கொண்ட எச்சரிக்கை பதாகை ஒன்றினை இணையத்தில் வெளியிட்டது. மேலும் ஜிங்ஜிங்-னை பிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த பாதகையினை பார்த்த நெட்டீசன்கள், ஜிங்ஜிங்-னை குறித்து தகவல் அளிப்பதற்கு பதிலாக அவரின் அழகில் மயங்கி காதல் வசனங்களை வெளியிட்டனர்.
【高颜值女嫌犯走红警察手机被打爆 有2名嫌疑人自首】日前,四川绵阳市公安局发布的一则关于检举“酒托”诈骗犯罪团伙的通告在网络热传,通缉令中一名叫“卿晨璟靓”的女嫌疑人因“高颜值”引发热议,有网友感慨“卿本佳人,奈何做贼”。对于热议,涪城公安提醒“无论颜值如何,都不能成为逃避法律惩罚的借口”。 pic.twitter.com/wzRh4pTlmO
— China Police (@cnpoliceofficer) November 25, 2018
நெட்டீசன்களின் ஆர்வமிகு செயலப்பாட்டால் திருடி என்னும் பெயர் அழகி என அடைமொழி கொடுக்கப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட காவல்துறையினரும் இவரை பல வகை பதாகைகள் மூலம் பிரபலப்படுத்தியது. குறிப்பாக "Having good looks is not your fault, but using your good looks to break the law is." (அழகாக பிறந்தது உன் குற்றம் இல்லை, ஆனால் அந்த அழகை பயன்படுத்தி சட்டதை உடைப்பது...") என்னும் வாசங்களுடன் காவல்துறை வெளியிட்ட விளம்பரம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது.
அதே வேலையில் இந்த விளம்பரத்திற்கு வாசகர்கள் கொடுத்த பதில்கள்...
ஒருவர் "அந்த அழகி எப்போது வேண்டுமானாலும் என்னை ஏமாற்றலாம்" என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் "இந்த அழகிய முகத்தை கொண்டு வேலைக்கு சென்றால், வேலை இல்லை என யாரும் கூற மாட்டார்கள். பிறகு ஏன் இவர் திருட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்களின் படி கைது செய்யப்பட்ட பெண் அவரது பள்ளி காலத்தில், பள்ளியின் அனைத்து ஆண்களையும் தன் பின் சுற்ற வைத்தவர். படிப்பில் மந்தம் தான் ஆனால் படிப்பை தவிற மற்றவற்றிலும் படு சுட்டியாம்.