குரங்கு மாணவர்கள் வைரல் வீடியோ: தினந்தோறும் ஆச்சரியமான விஷயங்களால் நம்மை உறைய வைக்கும் இணையதளங்களும், சமூக ஊடகங்களும், நமது வாழ்வுடன் ஒன்றிவிட்டன. நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தும் இங்கே கிடைக்கின்றன. சரியானவை மட்டுமல்ல, தேவையில்லாதவை, வம்பை விலைக்கு வாங்க வைப்பவை என பலதரப்பட்ட உள்ளடக்கங்களால் நிரம்பி வழியும் சமூக ஊடகஙக்ள் சில சமயம் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
சிந்திக்க வைக்கும் வீடியோக்கள்
சிந்திக்க வைத்தாலும், சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் இணைய பயன்பாடு சில சமயம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, பல சமயங்களில் சோகத்தையும் சேர்க்கின்றன. மகிழ்ச்சியான தருணங்கள் முதல், நிலநடுக்கத்தின் சில நொடிகள் வரை அனைத்தையும் அருகில் இருந்து பார்த்த நிறைவைத் தரும் வீடியோக்கள் நமது வாழ்க்கையில் வண்ணத்தை சேர்க்கின்றன.
சிரிக்க வைக்கும் சமூக ஊடக வீடியோக்கள்
இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. அதிலும் விலங்குகளின் வித்தியாசமான செயல்களைப் பார்த்து ரசிக்க இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசிக்கின்றனர்.
மேலும் படிக்க | ’ஓரமா போய் பயம்காட்டுப்பா’ நாக பாம்புக்கு ஷாக் கொடுத்த குரங்கு..! வீடியோ
குரங்குகளின் குறும்பு வீடியோக்கள்
இந்நாட்களில் இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விலங்குகளின் இப்படிப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் வைரல் ஆகின்றன. விலங்குகளின் குறும்புகளை காட்டும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன.
குறும்பு என்று சொன்ன பிறகு, அதில் குரங்குகளின் குறும்பைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? குரங்குகள் செய்யும் ஜாலியான சேட்டை வீடியோவை பாருங்கள். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பதால், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமான பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் பகக்த்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு: செம்ம வீடியோ வைரல்
இந்த வீடியோவில், ஒரு மாணவரைப் போலவே சீருடை அணிந்து செல்லும் குரங்கு, கையைப்பிடித்து மற்றுமொரு குரங்கு மாணவியை அழைத்துச் செல்கிறது. இரண்டும் சீருடையில் அழகாக நடந்து செல்லும்போது மாணவர்களைப் போலவே இருப்பது மனதை சுண்டி இழுக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ