வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குரங்குகள் வாழைப்பழத்தை விரும்பி உண்கின்றன. வாழைப்பழம் குரங்குகளுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். இதை மனதில் கொண்டு, சமீபத்தில் ஒரு விலங்கு பிரியர் குரங்குகளுக்கு வாழைப்பழ விருந்து வைக்க முடிவு செய்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் இதயங்களை வென்று வருகிறது.
மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்
15 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், நூற்றுக்கணக்கான வாழைப்பழங்கள் நிறைந்த தனது காரின் டிக்கியை முதலில் அந்த நபர் திறப்பதைக் காண முடிகின்றது. சில நொடிகளில், பசியுடன் இருந்த குரங்குகளின் மொத்தப் படையும் அங்கே கூடி வாழைப்பழங்களை உண்ணத் தொடங்குகின்றன. குரங்குகளுக்குத் தேவையான மற்ற உணவுப் பொருட்களையும் அவர் குரங்குகளுக்கு அளிக்கிறார். குரங்குகளுக்கு அந்த நபர் ஒரு டிரீட்டையே வைத்து விட்டார். குரங்குகளும் உணவை ரசித்து உண்கின்றன. இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது.
இந்த வீடியோவை க்ரீச்சர் ஆஃப் காட் என்ற ட்விட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது. அதில் "ஹேப்பி சண்டே” எழுதப்பட்டுள்ளது.
இதயங்களை கொள்ளைக்கொள்ளும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சுமார் 1.5 மில்லியன் வியூஸ்களையும் 80-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகிறது. பயனர்கள், குறிப்பாக விலங்கு பிரியர்கள், அந்த நபரின் கனிவான சைகையைப் பாராட்டி வருகின்றனர். "லவ் திஸ்” என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். இன்னும் பலர் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அனைவரும் அவரவரது வாழ்க்கையில் பிசியாக இருக்கும் இந்த காலத்தில், வாயில்லா ஜீவன்களுக்கு அந்த நபர் உணவு அளித்த இந்த சம்பவம் அனைவரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க | கடற்கரையில் கடற்சிங்கங்களின் அலப்பறை: அரண்டு ஓடும் மக்கள் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ