வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
சமீப காலங்களில் நடன வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகப் பார்க்கப்படுகின்றன. இவற்றால் பயனர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்கிறார்கள். இவற்றில் சில வீடியோக்கள் நடனமாடுபவர்களின் திறமையை காட்டுகின்றன. சில, எதிர்பாராத விதமாக வேடிக்கையான வீடியோக்களாகி விடுகின்றன. சமீபத்தில் இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து பயனர்களால் தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்தப்படவில்லை.
பொதுவாக வீடியோக்களில், சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகும் பாடல்களுக்கு பலர் நடனமாடுகிறார்கள். தங்கள் நடனத்தின் மூலம் இணையவாசிகளின் இதயத்தை வென்று, பிரபலமாக காண்டெண்ட் கிரியேட்டர்கள் பல வித இடங்களில் டான்ஸ் ஆடுகிறார்கள். தற்போது வைரல் ஆகும் இந்த வீடியோவில், ஒரு பெண் மலைகளுக்கு இடையில் ரீல்ஸ் உருவாக்குவதை காண முடிகின்றது.
மேலும் படிக்க | வீடியோ கால் பேசவிடாமல் தொந்தரவு செய்யும் பாய் பெஸ்டி பூனை! வைரல் வீடியோ!
பெண்ணை துரத்திய குரங்கு
ரீல் தயாரிக்கும் போது, அந்தப் பெண் தனது சுற்றுப்புறத்தைப் பற்றி கூட கவலைப்படாமல், ரீல் வீடியோ-வை பதிவு செய்வதிலேயே மும்முரமாக உள்ளார். இதன் காரணமாக சாலையில் அமர்ந்திருக்கும் குரங்கை அவர் காணவில்லை. ஆனால், நடனமாடிக்கொண்டு வரும் பெண்ணை பார்த்தவுடன் அந்த குரங்கு ஆவேசமாக அவரை நோக்கி ஓடி வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பயனர்களை சிரிக்க வைக்கும் வீடியோ
ये हमारे पूर्वज गलती सुधारने की कोशिश कर रहे थे...#TrendingNow #Trending #trendingvideos pic.twitter.com/7uTN7y2zA6
— Narendra Singh (@NarendraNeer007) November 10, 2022
இந்த வீடியோவை நரேந்திர சிங் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் ரீல் செய்யும் பெண்ணை குரங்கு துரத்துவதைப் பார்த்து பயனர்களால் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதை மீண்டும் மீண்டும் பயனர்கள் பார்த்து வருகிறார்கள். குரங்கு தன்னை நோக்கி வருவதை பார்த்தபிறகு பெண் சடாரென்று ஓடுவதையும், அவரது ரியாக்ஷனையும் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.
இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | ‘நானும் வரேன்..வெயிட் பண்ணுங்க’: திடீரென வண்டியில் பாய்ந்த சிங்கம், வைரலான வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ