Beer விளம்பரத்தில் MS Dhoni: பிராண்ட் பெயரில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், ஜெர்சி எண் 7

எம்.எஸ். தோனி விரைவிலேயே ஒரு பீர் விளம்பரத்தில் காணப்படுவார். செவன் இங்க்ஸ் ப்ரூஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் COPTER 7 BEER என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 08:59 PM IST
Beer விளம்பரத்தில் MS Dhoni: பிராண்ட் பெயரில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், ஜெர்சி எண் 7 title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். ஆனால் அதன் பிறகும் தோனிக்கு ரசிகர்கள் குறையவில்லை, 

இப்போது தோனி ரசிகர்கள் அவர் ஐபிஎல்-லில் (IPL) விளையாடுவதைக் காணக் காத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு விடைபெற்ற பிறகு, தோனிக்கு பல விஷயங்களை செய்ய அதிக நேரம் கிடைத்துள்ளது. அவர் இந்த நேரத்தை தனது குடும்பத்துக்கும் வியாபாரத்துக்கும் அளிக்கிறார். அதாவது, ஓய்வு பெற்ற பிறகும், அவரது பெயரும் புகழும் குறையவில்லை.

சமீபத்தில் எம்எஸ் தோனி பாலிவுட் இயக்குனர் ஃபரா கானுடன் ஒரு விளம்பரத்தின் படப்பிடிப்பில் காணப்பட்டார். இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாயின. மீண்டும் ஒரு முறை, ஒரு விளம்பரத்தின் காரணத்தால் தோனி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

தோனி பீர் விளம்பரத்தில் காணப்படுவார்

எம்.எஸ். தோனி (MS Dhoni) விரைவிலேயே ஒரு பீர் விளம்பரத்தில் காணப்படுவார். COPTER 7 BEER நிறுவனத்தின் விளம்பரத்தில் அவர் காணப்படுவார். செவன் இங்க்ஸ் ப்ரூஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் COPTER 7 BEER என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. மெலும், தோனியுடன் இணைந்து பணியாற்றுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Copter7 (@copter7official)

ALSO READ: தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் இணையத்தில் வைரல்

தோனியை சார்ந்து பீர் பெயர் இருக்கும் 

ஆம், செவன் இங்க்ஸ் ப்ரூஸ் பிரைவேட் லிமிடெட் (Seven Inks Brews Private Limited ) ஒரு பீர் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் COPTER 7 BEER ஆகும். இந்த பெயர் வைக்கப்படுவதற்கும் எம்.எஸ் தோனி தான் காரணம். எம்.எஸ் தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் (Helicopter Shot) மற்றும் ஜெர்சி எண் 7 ஆகியவற்றை சேர்த்து இந்த பீருக்கு COPTER 7 BEER என பெயரிடப்பட்டுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Copter7 (@copter7official)

தோனி முன்பு ஃபரா கானுடன் காணப்பட்டார்

சில நாட்களுக்கு முன்பு தோனியின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலானது (Viral Photos). அந்த படங்களில் அவர் இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் காணப்பட்டார். இது மட்டுமல்லாமல், பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் ஃபரா கானும் இந்த படங்களில் தோனியுடன் இருந்தார்.

தோனி ஃபரா கானுடன் ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பில் இருந்தபோது, அந்த விளம்பரத்திற்காக அவர் இந்திய அணியின் பழைய ஜெர்சியை அணிந்திருந்தார்.

ALSO READ: MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News