வைரல் வீடியோ: பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் கொஞ்சம் கூட நடுங்கவும் இல்லை, பயப்படவும் இல்லை. மாறாக இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தான் ஒரு கணம் நடுங்கி போவார்கள். ஆம், அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமும் இல்லை.
இந்த வீடியோவை பார்த்தால், ஒரு பெரிய பாம்புடன் ஒரு பெண் சண்டை போடுவதை காண முடிகிறது. சாலையில் செல்லும் பாம்பை அந்த பெண் பிடிப்பதாகத் தெரிகிறது. அந்த பாம்பின் தலைக்கு கீழ் கழுத்தை பிடித்து, கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அந்த பெண் அந்த பாம்பை (Snake) அடக்கி கட்டுக்குள் கொண்டு வருகிறார்.
ஆனால் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. அவர் ஹெல்மெட் அணிந்திருப்பதால் பாம்பைப் பிடிக்கும் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த பெண் பாம்பைப் பிடிப்பதை பார்த்து பலர் வியப்படைந்து உள்ளனர். வீடியோவின் இறுதியில், அந்த பெண் பாம்பை பிடித்தபடியே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.
ALSO READ | உயிர் விலைமதிப்பற்றது! இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் இதை பதிவு செய்துள்ளார். அதாவது சாலையோரத்தில் அந்த பெண் பாம்பைப் பிடித்தபடி நிற்பதைப் பார்த்தவுடன் அவர் இந்த நிகழ்வை தன் போனின் காமிராவில் பதிவு செய்தார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள் கூறுகையில், "நாங்கள் அந்த வழியாக சென்றபோது இந்த பெண் ஒரு பெரிய பாம்பைப் பிடிக்க முயற்சிப்பதைக் கண்டோம். இந்த தருணத்தை பதிவு செய்ய அங்கேயே நின்று பதிவு செய்தோம். ஆனால் அவரின் செயல் மிகவும் ஆபத்தானதாக இருந்தது" என்று வீடியோ எடுத்தவர் கூறியதாக, இந்த வீடியோவை பதிவிட்ட வைரல்ஹாக் கூறியுள்ளார்.
ALSO READ | Viral Video: தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த பெண் ஆசிரியர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR