4 நாட்களில் சனியின் பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவிக்கான யோகம்

Sani Vakra Nivarthi: நவம்பர் 4 ஆம் தேதி நடக்கவுள்ள சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 31, 2023, 01:04 PM IST
  • கும்ப ராசியில் சனியின் வக்ர நிவத்தி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
  • இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறலாம்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு வரை சனி பகவானின் சுப பார்வை கிடைக்கும்.
4 நாட்களில் சனியின் பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவிக்கான யோகம் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் அவர் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க குறைந்தது இரண்டரை வருடங்கள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.  2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அவர் கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். 

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நல்ல செயல்களை செய்பவர்களுக்கு அவர் எப்போதும் நல்ல பலன்களையே அளிப்பார். தீய செயல்களில் ஈடுபட்டால் சனியின் கோவத்திற்கு ஆளாகி பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரலாம். 

நவம்பர் 4 ஆம் தேதி நடக்கவுள்ள சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிம்ம ராசி (Leo)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கும்பத்தில் நடக்கவுள்ள சனியின் வக்ர நிவர்த்தியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரும் காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் அதிக முன்னேற்றங்கள் ஏற்படும். பண பலம் அதிகரிக்கும். இந்த நல்ல பலன்கள் 2024 வரை தொடரும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம் என அனைத்திலும் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாகனம், சொத்து வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கைகூடும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாறுதல் வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் அருளால் நவம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: முழு ராசிபலன் இதோ

மேஷ ராசி (Aries)

கும்ப ராசியில் சனியின் வக்ர நிவத்தி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு வரை சனி பகவானின் சுப பார்வை கிடைக்கும். இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். முக்கியமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல முதலீட்டு லாபத்தைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைக்கும். இந்த நேரத்தில், வேலை தேடுபவர்களும் நல்ல வேலைகளை பெறுவார்கள். இதுமட்டுமின்றி வியாபாரம் செய்பவர்கள் இந்த நேரத்தில் அதிக லாபத்தை காணலாம். 

மகர ராசி (Capricorn)

மகர ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டு வரை சனியின் வக்ர நிவர்த்தியின் பலன்களை அனுபவிப்பார்கள். கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைந்தவுடன், மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த காலகட்டத்தில், சனி பகவானின் அருளால் மகர ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி மக்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமான நேரமாக இருக்கும். வியாபாரத்தில் பெரும் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடனான உறவுகள் மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விருச்சிகத்தில் சூரியன்... கார்த்திகையில் பட்டையை கிளப்பப் போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News