குரு பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகம்: குரு பகவான் பல நன்மைகளை அள்ளித்தரும் கிரகமாக கருதப்படுகிறார். அவர் மனிதர்களின் வளர்ச்சி, அறிவாற்றல், கல்வி மற்றும் தொண்டு செய்யும் குணம் ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழைய உள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி அவர் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் பெயர்ச்சியாவார். மே 1, 2024 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். அவரது ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகும்.
குருவின் மகா பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அபரிமிதமாக நற்பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்
குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சியாவது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருந்தால், உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | கஜகேசரி யோகத்தால் கெட்டகாலம் முடிந்து பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்!
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குரு பகவான் துலா ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தருவார். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த பணிகள் முடிவடையும். புதிய வருமானத்துக்கான வழிகள் பிறந்து பொருளாதார நிலை மேம்படும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பல நல்ல செய்திகளை கொண்டு வரும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களும் குரு பெயர்ச்சியால் ஆதாயம் பெறுவார்கள். தமிழ் புத்தாண்டில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். சமூக மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டிர்ந்த பணிகள் நடந்து முடியும்.
மீனம்
குரு பகவான் மீன ராசியை விட்டு மேஷ ராசிக்கு பிரவேசித்தாலும், மீன ராசியினருக்கு அதிக பலன்களை தருவார். குருவின் சஞ்சாரத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெற்று அதன் மூலம் லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். அதனால் அவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ