தனது புத்தக வெளியீட்டிற்காக பயோ பபிள் பாதுகாப்பு வளையத்தை விட்டு தான் வெளியே வந்தது தவறில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதியாக இருக்கிரார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செப்டம்பர் 1 ம் தேதி லண்டனில் தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலநதுக் கொண்டார். அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, பல பிரச்சனைகள் எழுந்தன.
முதலாவதாக ஐபிஎல் போட்டிகளில் சிக்கல் ஏற்பட்டது, பல மூத்த வீரர்களும் கொரோனாவின் பிடியில் சிக்கினர். அதுமட்டுமல்ல, ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
Update: The BCCI and ECB held several rounds of discussion to find a way to play the match, however, the outbreak of Covid-19 in the Indian team contingent forced the decision of calling off the Old Trafford Test.
Details: https://t.co/5EiVOPPOBB
— BCCI (@BCCI) September 10, 2021
இவை அனைத்தையும் மீறி, ரவி சாஸ்திரி தனது புத்தக வெளியீட்டை நியாயப்படுத்தியுள்ளார். புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது, ரவி சாஸ்திரி பயோ பபிள் பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியேவந்தார். அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ’
ரவி சாஸ்திரியின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த பிசிசிஐ, அனுமதியின்றி அவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும், கூட்ட நெரிசலான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மற்ற வீரர்களையும் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறது..
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செப்டம்பர் 1 ஆம் தேதி லண்டனில் தனது 'ஸ்டார் கேசிங்: தி பிளேயர்ஸ் இன் மை லைஃப்' (Stargazing: The Players in My Life) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சி தொடர்பான விமர்சனங்களையும் அவர் நிராகரித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு நேர்காணலில் பேசிய சாஸ்திரி, தற்போது இங்கிலாந்து முழுவதும் திறந்திருக்கிறது, எனவே இப்போது கொரோனா பரவியது போன்று முதல் டெஸ்டின் முதல் நாளில் கூட நடந்திருக்கலாம். இதற்காக யாரையும் குறை கூறுவது சரியல்ல என்று சொன்னார்.
READ ALSO | கொரோனா ஏற்படுத்திய சிக்கல்; India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!
உண்மையில், இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் அணியில் பலருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டது. முதலில் ரவி சாஸ்திரிக்கு தொற்று உறுதியாக, அதையடுத்து, பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவிருந்த ஐந்தாவது டெஸ்டுக்கு முன்னதாக, உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மருக்கும் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டது. எனவே மான்செஸ்டர் டெஸ்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் ரத்து பற்றி பேசுவதற்கு பதிலாக, தொடரில் இந்திய அணியின் செயல்திறனை பற்றி பேசுவது சரி என்று சாஸ்திரி கூறுகிறார். இது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மீதான பிசிசிஐயின் கோபத்தை அதிகரித்துள்ளது.
ALSO READ | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR