பொள்ளாச்சியில் குடும்ப சண்டையில் மாமியார் தலையை கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவருக்கு வயது 62. இவர் பத்திர எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டதால் மின் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சரவணக்குமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கல்பனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவ்வபோது, சரவண குமார் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சரவணக்குமார் மின் நகரில் உள்ள தாயார் நாகேஸ்வரியின் வீட்டிற்கு வந்து தங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மகன் நிலை குறித்து கவலையுற்ற நாகேஸ்வரி, மருமகள் கல்பனா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. .
இந்நிலையில், இன்று நாகேஸ்வரி வீட்டிற்கு சென்ற கல்பனா, வாக்குவாதம் செய்ததில் கோபத்தில் மாமியாரின் தலையை கடித்தார். காயமடைந்த அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக மருமகள் கல்பனாவை போலீசார் கைது செய்தனர்.