சென்னையில் குடிநீர் குறை தீர்க்க புதிய செயலி அறிமுகம்

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் "சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி" ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார்.

Last Updated : Mar 5, 2019, 02:17 PM IST
சென்னையில் குடிநீர் குறை தீர்க்க புதிய செயலி அறிமுகம் title=

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் "சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி" ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார்.

சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடதிலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த குறைதீர்க்கும் செயலி மூலம் பொது மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே புகார்களை பதிவு செய்ய முடியும். இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் தற்போது 16 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள 654 லாரிகள் மூலம் தெருக்கள் வாரியாகவும், கட்டண முறையிலும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறுகலான சாலைகளில் எளிதாகச் செல்லும் வகையில் 3000 லிட்டர் கொள்ளளவுள்ள 2 சின்டெக்ஸ் டாங்க்குகளை ஏற்றிச் செல்லக்கூடிய சிறிய லாரிகளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Trending News