சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
ராகுல் காந்தி கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாகக் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்தை கேட்டறிந்ததார். புதுவை முதல் மந்திரி நாராயணசாமி மற்றும் புதுவை அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, ஜெ.எம். ஆரூண், குஷ்பு, முன்னாள் எம்.பி. விசுவநாதன், நாசே. ராமச்சந்திரன் கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலை வர் ஏ.எம். விக்ரம ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் மாவட்டக் கழகச் செய லாளர்களும், முன்னணியினரும் நேரில் வந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.