அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ நிறுவனத்தின் இயர்பட்ஸ்

ஒப்போ நிறுவனம் 'என்கோ பட்ஸ்' பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 MM டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

Written by - RK Spark | Last Updated : Sep 8, 2021, 07:14 PM IST
அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ நிறுவனத்தின் இயர்பட்ஸ்  title=

ஒப்போ நிறுவனம் 'என்கோ பட்ஸ்' பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 MM டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

airbuds

மியூசிக், பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. கேமிங் ப்ரியர்களுக்கு சூப்பர்-லோ 80 MS லேடென்சி கேம் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இயக்க பயனர்கள் இயர்பட் மீது மூன்று முறை க்ளிக் செய்ய வேண்டும்.  இந்த இயர்பட்ஸ் கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. ஒப்போ என்கோ பட்ஸ் மாடலில் ஐ.பி.54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த இயர்பட் கேஸ் 400 MAH. பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

மேலும் 10 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய செல்போனிலிருந்து ப்ளூடூத் மூலம் பகிர்ந்து இயர்பட்சை  உபயோகிக்க முடியும்.இதற்காக ப்ளூடூத் சிப்செட் 5.2 தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைத்துள்ளனர் .  ஒப்போ என்கோ பட்ஸ் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16-ம் தேதி வரை ரூ. 1,799 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ALSO READ ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் வெளியீடு! பெண்களுக்கென்று பிரத்யேகமான ஸ்மார்ட்வாட்ச்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News