நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?

Tata Nexon CNG vs Maruti Brezza CNG: Cars Under 10 Lakhs : டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்காக வெயிட் பண்ண வேண்டாம், அதற்கு முன்பே மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மைலேஜ் 25 கிமீ கொடுக்கும் மாருதியின் இந்த கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2024, 06:25 PM IST
  • மார்க்கெட்டில் இருக்கும் சிஎன்ஜி காரில் பெஸ்ட்?
  • 10 லட்சம் ரூபாய் விலையில் வாங்க முடியுமா?
  • மாருதி மற்றும் டாடா கார்களின் விலை, அம்சங்கள் இங்கே

Trending Photos

நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா? title=

இப்போதெல்லாம் கார் மார்கெட்டில் காம்பாக்ட் SUV வாகனங்களில் CNG இன்ஜின்களை மக்கள் விரும்புகிறார்கள். பொருளாதார ரீதியில் விலை நிர்ணயம் செய்யப்படும் இந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவு குறைவு. டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸானின் சிஎன்ஜி பதிப்பை இந்த பிரிவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில், மாருதியின் பிரெஸ்ஸா சந்தையில் நெக்ஸானுடன் போட்டியாக ஆல்ரெடி இருக்கிறது. இந்த இரண்டு வாகனங்களும் நிறுவனங்களால் உயர்தரமாக உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மிகப்பெரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை. இரண்டையும் பற்றி பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் சிஎன்ஜி

டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஜூன் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், இது 30-30 கிலோ எடையுள்ள இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களைப் பெறும் என்று கூறப்படுகிறது, இதன் காரணமாக மக்கள் தங்கள் லக்கேஜ்களை வைக்க 200 லிட்டருக்கும் அதிகமான பூட் ஸ்பேஸ் கிடைக்கும். டாடா நிறுவனம் இந்த சிறிய எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் ஹைபவர் என்ஜின் வழங்கும். இது சாலையில் அதிக பிக்கப்பை உருவாக்கும். தற்போது, ​​Nexon இன் பெட்ரோல் மற்றும் மின்சார வேரியண்டுகள் கார் மார்கெட்டில் கிடைக்கின்றன.

மேலும் படிக்க | உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால் ஆன்லைனில் பெறுவது எப்படி?

டாடா நெக்ஸான் விலை

இந்த காரில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஏர்பேக் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற மேம்பட்ட அம்சங்கள் இருக்கும். இந்த கார் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல் தீம் இன்டீரியர், பின் இருக்கையில் சைல்டு ஆங்கரேஜ், ஆட்டோ ஏசி போன்ற அம்சங்களுடன் கிடைக்கும். தற்போது, ​​​​நிறுவனம் அதன் விலையை வெளியிடவில்லை, ஆனால் இந்த கார் சுமார் ரூ. 13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாருதி பிரெஸ்ஸா

இந்த காரின் சிஎன்ஜி பதிப்பு ரூ.12.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வருகிறது. இதில் நான்கு வகைகள் கிடைக்கின்றன, மேலும் பெட்ரோலுக்கு 19.05 கிமீ/கிலோ மற்றும் சிஎன்ஜியில் 25.51 கிமீ/கிலோ வரை மைலேஜ் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. 5 இருக்கைகள் கொண்ட இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் வழங்கப்படுகிறது.

பிரெஸ்ஸா அம்சங்கள்

இந்த காரில் டூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் சன்ரூஃப் ஆப்ஷனும் கிடைக்கிறது. காரின் டாப் மாடல் ரூ.16.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த பெரிய காரில் 1462 சிசி அதிக பவர் எஞ்சின் உள்ளது. இதில் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் 16-இன்ச் டயர் அளவு உள்ளது.

மேலும் படிக்க | Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News