தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் மரணமடைந்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டது.
இந்த செட்டின் பிளம்பராக வேலை செய்த மும்பையைச் சேர்ந்த கரீம் இப்ராஹிம் ஷேக் திடீரென்று இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழில் தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1994ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 வருடங்கள் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் என கோர்ட்டால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகை நயன்தாரா 'ஜல்லிக்கட்டு' முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் என அதிரடியாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்க்கு கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- மோடி தலமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வருவது முறையல்ல, இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே கொள்கை சாத்தியமல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரி உடை , உணவு முறை என்று கட்டாயப்படுத்த முடியுமா ? இது போல் இந்த கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.