காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட தமிழக பிரச்னைகளை தீர்வு காண வலியுறுத்தி, தலைமைச் செயலக ஊழியர்களில் பலரும் கருப்புப் பட்டையுடன் செவ்வாய்க்கிழமை பணியாற்றினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தொடர்ந்து உண்மை செல்லாமல் மறைக்கும் தமிழக அரசு இன்றே ராஜினாமா செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகம் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திபிற்க்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் தொடர்பாக எதுவும் நான் பிரமதரிடம் பேசவில்லை. தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். மேலும் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளளேன்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இன்றிரவு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. இந்நிலையில் நாளை ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இன்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர்.
இன்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசினார்.
மரியாதையை நிமித்தமாக இருவரையும் சந்தித்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.
தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் நாங்கள் அதிமுகவில் இணைவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது.
அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டாலின் தனக்கே உரிய பாணியில் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்.
இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பதவியில் இருந்த போது ஏன் உத்தரவிடவில்லை என்று மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்த கேள்வி குறித்து பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'ஒய்' ('Y') பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றுமுதல் 'ஒய்' ('Y') பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை நடத்திவரும் பன்னீர்செல்வம் இல்லம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அவருடன் அவசர ஆலோசனை நடத்த நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அணி, ஓபிஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டபோதெல்லாம் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்றவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே.
1951-ம் ஆண்டு, ஜனவரி14-ம் தேதி, பெரியகுளத்தில் பிறந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இவர் பி.ஏ முடித்தபின்னர் தான் அரசியலுக்கு வந்தார்.
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக-வின் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர்.
அவரது மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் அவர்கள், இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர்.
அந்த அணியை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடந்த 30 வருடமாக தங்கியிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்ததோடு தற்போது அதிமுக சட்டசபைத் தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்களை சமரசம் செய்ய இயலாத அதிருப்தியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.
பின்னர், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னை திரும்பவுள்ளார்.
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் ஓ.பி.எஸ்., வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி இருந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.