வங்கி ஊழியர்கள் உங்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ அல்லது வங்கியில் உங்களது குறைகள் தீர்க்கப்படவில்லை என்றாலோ இனிமேல் நீங்கள் எவ்வித அச்சமோ அல்லது கவலையோ கொள்ளவேண்டிய தேவையில்லை. வங்கி அல்லது வங்கி ஊழியர்களுக்கு எதிராக நீங்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்திய ரிசர்வ் வங்கி உங்களுக்கு சிறப்பான வசதியினை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த இன்டெக்ரேட்டட் ஓம்புட்ஸ்மேன் திட்டத்தின் மூலம் வங்கிகள், என்பிஎஃப்சிகள் அல்லது வங்கி அதிகாரிகளின் மோசமான நடத்தைகள் அல்லது ஏடிஎம் மற்றும் வங்கி அமைப்பு தொடர்பான எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி உடனே நீங்கள் புகார் செய்யலாம். உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது என்பிஎஃப்சி-யில் பதிவு செய்து அவர்களால் நிராகரிக்கப்பட்டோ அல்லது 30 நாட்களுக்குள் எந்தப் பதிலும் உங்களுக்கு கிடைக்காமல் போனாலோ மட்டுமே இந்த இன்டெக்ரேட்டட் ஓம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் நீங்கள் புகார் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | NPS: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்; ₹64,000 ஓய்வூதியம் தரும் சூப்பர் திட்டம்!
புகார்களை பதிவு செய்வதற்கான வழிகள்:
1) வங்கிகள் அல்லது வங்கி அதிகாரிகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திற்கும் ஆன்லைன் வாயிலாக நீங்கள் புகார் பதிவு செய்ய நீங்கள் https://cms.rbi.org.in என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் புகாரைப் பதிவுசெய்யும் ஆப்ஷன் கிடைக்கும், அதில் நீங்கள் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
2) அடுத்ததாக ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட ரசீது மற்றும் செயலாக்க மையத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் புகார் செய்யலாம். இதனை செய்ய உங்கள் புகார் என்னவென்று தெளிவாக எழுதி அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து CRPC@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
3) அடுத்ததாக புகாரளிக்க விரும்பும் நபர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி புகாரில் கையொப்பமிட வேண்டும், பின்னர் அந்த புகாருடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி,
4வது தளம், பிரிவு 17,
சண்டிகர் - 160017.
மேலும் படிக்க | Jackpot! பழைய அரிய ‘ரூபாய் நோட்டுக்களை’ விற்று லட்சாதிபதியாக ஆவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ