Ashoka Tree Uses Benefits: ஆயுர்வேதத்தில், அசோக மரம் அதன் ஆன்மீக குணங்களுக்கும், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. டிஸ்மெனோரியா, வயிற்று வலி மற்றும் கருப்பை பிடிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு அசோக மரத்தின் பட்டைகள் நன்மை பயக்கும். அசோக மரத்தின் வேர்கள் மற்றும் அசோகா விதைகள் முகப்பரு, தோல் அழற்சி உள்ளிட்ட பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன.
அசோக மரம்
அசோகா அல்லது சரகா இண்டிகா என்பது இந்திய துணைக்கண்டத்தின் தக்காண பீடபூமி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஒரு மழைக்காடு மரமாகும். இந்த மரம் இந்திய மரபுகளில் மிகவும் புனிதமான மரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அசோக மரத்தின் சிறப்பு என்ன?
அசோக மரத்தில் இருந்து பெறக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இதில் டானின்கள், கிளைகோசைட், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கால்சியம் உள்ளது. இது கார்பன் மற்றும் இரும்பின் கார்போனிக் சேர்மங்களையும் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் உள்ளது.
அசோக மரத்தின் ஆரோக்கிய நன்மைகள்
அசோக மரத்தின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அசோக மரத்தின் இலைகள், பட்டைகள் மற்றும் விதைகள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்!
முகப்பரு சிகிச்சை
அசோக மரத்தின் பட்டையை வேகவைத்து கெட்டியான கஷாயமாக்கி, ஆறிய பின் கடுகு எண்ணெய்யுடன் சேர்த்து தடவலாம். சில நாட்களில் முகப்பரு நீங்கிவிடும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
இந்த அசோக மரத்தின் மூலிகை கருப்பை தசைகள் மற்றும் எண்டோமெட்ரியத்தில் செயல்படுகிறது. இதனால் வயிற்று வலி மற்றும் பிற தசை பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அமினோரியா, லுகோரியா, ஃபைப்ராய்டுகள், நீர்க்கட்டிகள் மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதனால் அசோக மரமானது பெண்களுக்கு ஏற்படும் மகளிர் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அறிவுத்திறனை மேம்படுத்த உதவும் அசோக மரத்தின் பட்டை
அசோக மரப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்வது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகிறது. அசோக மரத்தின் பட்டை மற்றும் பிரம்மி பொடியை சம அளவு கலந்து, இந்த கலவையை 1 தேக்கரண்டி தினமும் இரண்டு முறை ஒரு கப் பாலுடன் உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: Nexletol: மாரடைப்படை தடுக்கும் புதிய கொலஸ்ட்ரால் மருந்து நெக்ஸ்லாடோல்!
சருமத்திற்கு சிறந்த பயன் அளிக்கும் அசோக மரத்தின் இலைகள்
அசோக மரத்தின் மூலிகைகளை உட்கொள்வது நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது, எனவே நமது சருமத்திற்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது. அசோக மர மூலிகைகள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வாமை மற்றும் பிற தோல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது. அசோக மரத்தின் சாற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் தீக்காயங்கள் மற்றும் தோல் எரிச்சல்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
அசோகா செடி பூக்கள் இரத்தப்போக்கை தடுக்கிறது
இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க, அசோகா செடியின் பூக்களை அரைத்த சில துளிகள் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அசோகப் பூக்கள் ரத்தக்கசிவு வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகின்றன. இதனால் அசோகா பூக்கள் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
வயிற்று வீக்கத்துக்கு நிவாரணம்
அசோக மரத்தின் பட்டைகள் அல்லது இலைகளை உட்கொள்ளும்போது, வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றி, வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அசோக மரத்தின் பட்டை பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: சுகர் நோயாளிகளே நீங்கள் மாம்பழம் பிரியர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்
பைல்ஸ் மற்றும் சர்க்கரை நோய்க்கு நிவாரணம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அசோக மரத்தின் உலர்ந்த பூக்களை தங்கள் நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம். அசோக மலர்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க உதவுகிறது. அசோக மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை சப்ளிமெண்ட்ஸ் பைல்ஸ் சிகிச்சைக்கு உதவுகிறது. அசோக மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படம் கஷாயம் பைல்ஸ் சிகிச்சையளிக்க பயன் அளிக்கும்.
வயிற்றுப்போக்கை தடுக்கும் பூக்கள்
அசோக மரத்தின் பூக்கள் மலத்தில் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்கிறது.
சிறுநீரக கற்களை நீக்கி ஆஸ்துமாவை குணப்படுத்தும்
அசோக மரத்தின் விதை தூள் சிறுநீரக கற்களை கட்டுப்படுத்த உதவும் ஒரு இயற்கை முறையாகும். விதைப் பொடியை வெற்றிலையில் கட்டி பல முறை சாப்பிட்டு வந்தால், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும்.
மூட்டுவலியைப் போக்க உதவும்
அசோக மரத்தின் சாறு வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே வலியைப் போக்க உதவுகிறது. உங்கள் மூட்டுகளில் வலி ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டையை பேஸ்ட் செய்து சிறிது நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க: Baking Soda: அதிகமா மட்டும் சாப்பிட்டுடாதீங்க.. இந்த ஆபத்துகள் ஆட்கொள்ளும்!!
அசோக மரத்தின் பயன்கள்
அசோக மரத்தின் பட்டை சருமத்திற்கு நல்லது மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தேள் கடிக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. அசோக மரத்தின் உலர்ந்த பூக்கள் கூட நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
அசோக மரத்தின் பக்க விளைவுகள்
அசோக மரத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் இந்த மரத்தின் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சில வகையான உணவுகளுக்கு உணர்திறன் உள்ளவர்கள் இந்த மரத்தின் தயாரிப்புகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ