ICMR Warning On Excessive Intake Of Tea and Coffee: தமிழ்நாட்டில் என்றில்லை நாடு முழுவதுமே பாலில் டீ, காபி போட்டுக் குடிக்கும் பழக்கம் என்பது அதிகமாக காணப்படுகிறது. இந்திய சமூகத்தில் டீ, காபி மீது உள்ள மோகம் என்பதை வார்த்தைகளால் அளவிடவே முடியாத அளவிற்கு உள்ளது. சோகத்தில் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்ததாலும், மன அழுத்ததமாக இருந்தாலும் சரி, கொண்டாட்டமாக இருந்தாலும் அனைத்திலும் டீ, காபி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
பசிக்கும் சரி, ருசிக்கும் சரி டீ - காபியை அருந்துபவர்களை அதிகமாக நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதாவது ஒருநாளுக்கு 7-8 டீக்களை குடிக்கும் நபர்களை கண்டிப்பாக அனைவரும் கடந்து வந்திருப்பீர்கள். காலை, மதியம், மாலை, இரவு என்றில்லாமல் ஒருநாளின் எந்த வேளையிலும் சரி, கோடை காலம், குளிர் காலம், மழை காலம் என அனைத்து சீசன்களிலும் டீ - காபியை மட்டும் நம் ஊர்களில் இருந்து பிரிக்கவே முடியாது. அந்தளவிற்கு வேரூன்றி இருக்கிறது டீ - காபி குடிக்கும் பழக்கம்.
அதிக காஃப்பின்
அந்த வகையில் டீ, காபி குடிப்பவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம். ஐசிஎம்ஆர், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) இணைந்து மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய உணவுகள் குறித்தும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூகத்தில் டீ, காபி மீது உள்ள முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, அவற்றை அதிகமாக குடிப்பதன் மூலம் அவை உடல்நலனில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க |மூளை, நரம்புகளை வலுப்படுத்தும் கசகசா.. சாப்பிடும் சரியான முறை!
டீ மற்றும் காபியில் காஃப்பின் (Caffeine)இருக்கும். இது மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவது மட்டுமின்றி, உடலியல் சார்பையும் தூண்டும் என ஐசிஎம்ஆர் அதன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. 150 மில்லி லிட்டர் வடிகட்டப்பட்ட காபியில் 80-120 மில்லி கிராம் காஃப்பினும், அதே அளவு இன்ஸ்டன்ட் காபியில் 60-65 மில்லி கிராம் காஃப்பினும் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 150 மில்லி லிட்டர் டீயில் 30-65 மில்லி கிராம் காஃப்பின் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, ஒருநாளைக்கு ஒருவர் 300 மில்லி கிராம் காஃப்பினை எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் டீ, காபி குடிக்காதிங்க!
மேலும், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு முன் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதில் டான்னின்ஸ் (tannins) என்ற வேதிப்பொருள் இடம்பெற்றுள்ளது. இது உடலில் உள்ள இரும்புச்சத்து அதிகமாக உருஞ்சும் என தெரிவிக்கப்படுகிறது. டான்னின்ஸ் வயிற்றில் இரும்புச்சத்து இருக்கமாக்கி, உடல் இரும்புச்சத்து எடுத்துக்கொள்வதை கடினமாக்கும். இது உடலில் இரும்புச்சத்து குறைப்பாடு ஏற்படும், அனீமியா போன்ற நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது. அதி காபி குடிப்பது அதிக ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
என்ன சாப்பிடலாம்?
தேநீரை பால் சேர்க்காமல் குடித்தால் பல பலன்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், ரத்த ஓட்டம் சீராகும். இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றின் வாய்ப்பை குறைக்கும் எனவும் ஐசிஎம்ஆர் அதன் புதிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. மேலும், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மாமிசங்கள், கடல் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்படியும், எண்ணெய், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க |தொண்டை வலி பாடாய் படுத்துதா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ