குளிர்காலம் தொடங்கிவிட்டது, இந்த சீசனில் நீங்கள் சந்தையில் ஏராளமான காய்கறிகளைக் காணலாம். பச்சைக் காய்கறிகள் இயற்கையாககவே குளிர்காலத்தில் பல நன்மைகளைத் தருகின்றன. அதில், குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் முள்ளங்கியில் ஆரோக்கிய நன்மைகள் பெருமளவில் உள்ளன. முள்ளங்கி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு காய்கறி என்பது அனைவரும் அறிந்தது என்றாலும், அதில் வேறு பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.
முள்ளிங்கியின் ‘8’ அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
1. குளிர்காலத்தில் தினமும் முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவடைவதோடு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
2. முள்ளங்கி சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. ஏனெனில் முள்ளங்கியில் உள்ள அந்தசர்னின் இதய நோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது.
3. குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும்.
4. உங்கள் வீட்டில் நீரிழிவு நோயாளி இருந்தால், அவர்களுக்கு அதிக அளவில் முள்ளங்கியை சமைத்து கொடுங்கள்.
5. முள்ளங்கி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது.
6. உடல் சோர்வாக இருந்தால் முள்ளங்கி சாறு குடியுங்கள். உடனே உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
ALSO READ | Health Tips: கூர்மையான பார்வைக்கு இவற்றை கடைபிடித்தால் போதும்
7. உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக மாறினால், முள்ளங்கி சாற்றை சூடாக்கி, அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பதும் பலன் தரும். முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சை சாற்றை ஊற்றி, பற்களில் தேய்க்கலாம்.
8. முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR