அதிர்ச்சித் தகவல்! பச்சை காய்கறிகளில் Malachite Green எனும் நச்சு சாயம்

மலாக்கிட் பச்சை என்பது பச்சை காய்கறிகளில் காணப்படும் நச்சு தன்மை கொண்ட சாயம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு என்பதோடு, பல வித நோய்களுக்கும் காரணமாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2021, 02:11 PM IST
  • மலாக்கிட் பச்சை என்பது பச்சை காய்கறிகளில் காணப்படும் நச்சு தன்மை கொண்ட சாயம்.
  • காய்கறிகளில் கலப்படம் செய்வது எளிதாகி விட்டது.
  • உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு என்பதோடு, பல வித நோய்களுக்கும் காரணமாகிறது.
அதிர்ச்சித் தகவல்! பச்சை காய்கறிகளில் Malachite Green எனும் நச்சு சாயம்  title=

Malachite Green:  தற்போது, காய்கறிகளில் கலப்படம் செய்வது எளிதாகி விட்டது. கலப்படம் செய்யப்பட்ட காய்கறி மிகவும் ஆரோக்கியமற்றது என்பதோடு, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் சரியான மற்றும் கலப்படமில்லாத காய்கறிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம். காய்கறிகளை, பசுமையாகவும் பிரெஷ்ஷாக வைக்க சிலர் மலாக்கிட் பச்சை என்னும் சாயத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மலாக்கிட் கிரீன் என்பது பச்சை காய்கறிகளில் காணப்படும் மிகவும் நச்சு சாயம். 

ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!

மலாக்கிட் க்ரீன் என்றால் என்ன?

மலாக்கிட் பச்சை அனிலின் பச்சை, பென்சால்டிஹைட் பச்சை அல்லது சீனா பச்சை என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கிருமி நாசினிக்கான கரைசலில் இவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.  “மலாக்கிட் பச்சை பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. மீன் வளர்ப்புத் தொழிலில், முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளை அழிக்கும் சப்ரோலெக்னியா என்ற பூஞ்சையைக் கட்டுப்படுத்தப் இந்த ரசாயனம் பயன்படுகிறது என britannica.com வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதில் மட்டுமல்லாமல், மிளகாய், பட்டாணி மற்றும் கீரை ஆகியவற்றின் உற்பத்தியிலும் மலாக்கிட் பச்சை பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. காய்கறிகளை பசுமையாகவும், புதியதாகவும், பார்க்க பிரெஷ்ஷாகவும் இருக்க இந்த மலாக்கிட் பச்சை என்னும் நச்சு சாயத்தை பயன்படுத்துகிறார்கள்.

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

ஆரோக்கியத்திற்கு கேடு
உயிரி தொழில்நுட்ப தகவலுக்கான தேசிய மையம் (NCBI). இது குறித்து கூறுகையில், நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றின் காரணமாக சாயத்தின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது என்று கூறுகிறது. இது கார்சினோஜெனெசிஸ், மியூட்டஜெனெசிஸ், குரோமோசோமால் எலும்பு முறிவு, டெரடோஜெனசிட்டி மற்றும் சுவாச பிரச்சனை போன்ற பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இப்போது பச்சை காய்கறிகளில் மலாக்கிட் பச்சை நிற சாயம் கலக்கப்படுவதை அடையாளம் காண உதவும் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் கலப்படம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் கலப்படமில்லாத காய்கறிகளை வேறுபடுத்தி அறியலாம்.

FSSAI ட்விட்டரில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மலாக்கிட் பச்சை நிறத்தின் மோசமான விளைவுகளை விவரிக்கவும் வீடியோவை வெளியிட்டுள்ளது. 

Malachite Green கலப்படத்தை கண்டறியும் முறை

திரவ பாரஃபினில் (liquid paraffin), ஒரு துண்டு பருத்தியை நனைக்கவும்.
வெண்டைக்காயின் சிறிய பகுதியின் மீது தேய்த்து சோதிக்கவும். பருத்தி பச்சை நிறமாக மாறவில்லை என்றால், வெண்டைக்காயில் பச்சை சாயம் கலக்கப்படவில்லை என அர்த்தம்.
எனினும், அது பச்சை நிறமாக மாறினால், வெண்டைக்காயில் சாயம் கலக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News