ஆரோக்கியம் நிறைந்திருக்கும் நெல்லிக்காய் இவங்களுக்கு பிரச்சனை தான்..

Amla Eating Restrictions: செரிமானத்தை மேம்படுத்த நெல்லிக்காயை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சிலர் நெல்லிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 5, 2022, 05:02 PM IST
  • நெல்லிக்காயின் நன்மைகள்.
  • யார் யார் நெல்லிக்காயை உட்கொள்ளக்கூடாது
ஆரோக்கியம் நிறைந்திருக்கும் நெல்லிக்காய் இவங்களுக்கு பிரச்சனை தான்.. title=

நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. அதியமான் ஒளவைக்கு நெடுநாள் வாழவேண்டும் என அரியவகை நெல்லிக்கனி கொடுத்த கதை அனைவருக்கும் தெரியும். அது கதை இல்லை உண்மைதான். நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனால் சிலர் நெல்லிக்காயை மறந்து கூட உட்கொள்ளக் கூடாது. எனவே நெல்லிக்காயை யார் உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்த நோயாளிகள் நெல்லிக்காயை உட்கொள்ளக்கூடாது

இரத்தச் சர்க்கரைக் குறைவு: இரத்தச் சர்க்கரைக் குறைவு புகார் உள்ளவர்கள், நெல்லிக்காயை உட்கொள்ளக்கூடாது ஏனென்றால், நெல்லிக்காயை உட்கொண்டால், அது சர்க்கரையின் அளவை மோசமாக்கும் மற்றும் நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை குறைக்க கவனத்தில் கொள்ள வேண்டிய ‘முக்கிய’ விஷயங்கள்!

சளி மற்றும் இருமல்: சளி, இருமல் போன்ற நேரத்தில் வாய் ருசிக்கு சிலர் நெல்லிக்காயை சாப்பிடுவார்கள், ஆனால் சளி, இருமல் இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது, ஏனெனில் நெல்லிக்காய் குளிர்ச்சியான கனியாகும்.

சிறுநீரக பிரச்சனை: நீங்கள் ஏதேனும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், நெல்லிக்காயை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. சோடியத்தின் அளவை அதிகரிப்பது உங்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், நெல்லிக்காயை உட்கொள்வதை தவிர்க்கவும்.

வயிற்றில் வீக்கம்: சிலருக்கு வயிற்றில் வீக்கம் இருக்கும், அத்தகையவர்கள் அவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News