மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு தயார் நிலையில் இருக்க வேண்டும்: ECI

நாடாளுமன்ற தேர்தலுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ECI அறிவுறுத்தல்....  

Last Updated : Jan 13, 2019, 02:12 PM IST
மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு தயார் நிலையில் இருக்க வேண்டும்: ECI title=

நாடாளுமன்ற தேர்தலுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ECI அறிவுறுத்தல்....  

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறுவதையொட்டி அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த கூட்டத்தில் சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்தால், தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் விவரம் மற்றும் அதற்கான இடங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், அந்த கூட்டத்தில் இதில் சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள செயலி காண்பிக்கப்பட்டது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கூட்டமில்லாத வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். 

 

Trending News