தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர். தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்து செயல்பட்டு வெற்றி பெற்றவரும் தமிழகத்தின் அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்து செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் ஐயா கலைஞர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான 95வது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்!
Best wishes to Kalaignar M.Karunanidhi Ji on his birthday. A prolific writer, poet, thinker and orator, Karunanidhi Ji is one of India’s senior most political leaders. May he be blessed with a long and healthy life. @kalaignar89 pic.twitter.com/BnZJUA4kjJ
— Narendra Modi (@narendramodi) June 3, 2018
இதையடுத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர், ட்விட்டரில் கருணாநிதி ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
Greetings to Mr. George Fernandes on his birthday. Generations of Indians will remain grateful to George Saheb for his historic role in preserving India’s democracy. A people’s person, he distinguished himself as a capable administrator. I pray for George Saheb’s good health. pic.twitter.com/35ADgNuKQS
— Narendra Modi (@narendramodi) June 3, 2018