DA Hike, Employees DA Hike, DA Arrears, LTC, Employees LTC, Arrears Payment : பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பை ஒன்றை மாநில அரசு வெளியிட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 18 மாத ஊதியத்துடன், அகவிலைப்படி உயர்வுபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இதன் பலனை வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
DA Hike : நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு
இறுதியாக மாநில அரசின் பட்ஜெட் தொடரில் ஊழியர்களின் நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி நீண்ட நாட்களாக நிலுவைத் தொகையை வழங்க கோரி வலியுறுத்தி வருகின்றனர் அரசு ஊழியர்கள். எனினும் இது தொடர்பாக எவ்வித முடிவும் மாநில அரசு தரப்பில் எடுப்படவில்லை. ஆனால் பட்ஜெட்டில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி கடந்த மார்ச் 1 முதல், 2016 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்க அரசு முடிவு எடுத்தது. இதனுடன், ஊழியர்களுக்கு லீவ் என்காஷ்மென்ட் மற்றும் கிராஜுட்டியின் நிலுவைத் தொகையும் நேரடியாக வழங்கப்படும்.
DA Hike : மார்ச் 1, 2024 முதல் லீவ் என்காஷ்மென்ட் மற்றும் கிராஜுட்டி செலுத்தப்படும்
இதனிடையே நிலையில் இருந்த லீவ் என்காஷ்மென்ட் மற்றும் கிராஜுட்டி வரும் மார்ச் 1, 2024 முதல் படிப்படியாக செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | Train Fare: பயணிகள் ரயில் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைக்கும் இந்திய ரயில்வே!
DA Hike : ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி 4 சதவீத என்கிற தவணையாக வழங்கப்படும்
இது தவிர, வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்தின் பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியானரது, மேலும் இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.580 கோடி கூடுதல் செலவு செய்யப்படும் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்து இருந்தார்.
DA Hike : இரண்டு முறை LTC வசதி
அதுமட்டுமின்றி இதுவரை ஒரு முறை மட்டுமே LTC பெற்று வந்த ஊழியர்கள் தற்போது ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு, குறைந்தபட்சம் இரண்டு முறை LTC வசதியைப் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிந்தது இருந்தார்.
DA Hike : சம்பளத்திலும் அதிகரிப்பு இருக்கும்
இதனிடையே ஊழியர்களை குஷிப் படுத்தும் வகையில், ஊழியர்களின் சம்பளத்திலும் உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, இமாச்சல பிரதேச அரசு கவுரவ ஊதியத்தை 500 ரூபாயாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DA Hike : DA அதிகரிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
பொதுவாக நாட்டின் பணவீக்கத்தாய் பொறுத்து DA அதிகரிப்பை அரசாங்கம் தீர்மானிக்கிறது. அதேபோல் DA மற்றும் DR அதிகரிப்புகள் நிதியாண்டிற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பால் தீர்மானிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ