புதுடெல்லி: வரி செலுத்துவோருக்கான மற்றொரு பெரிய நிவாரணமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையான பல படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, முந்தைய காலக்கெடுவான 2021 ஆகஸ்ட் 31-லிருந்து செப்டம்பர் 30, 2021 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
வருமான வரித்துறையின் (Income Tax Department) அதிகாரப்பூர்வ வெளியீடு, "விவாத் சே விஸ்வாஸ் சட்டத்தின் கீழ், வரி செலுத்துவோருக்கு, பணம் செலுத்துவதற்கு முன்நிபந்தனையான படிவம் எண் 3 ஐ வழங்குவதில் மற்றும் திருத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30, 2021-க்குள் (கூடுதல் தொகை இல்லாமல்) தொகையை செலுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் சட்டம் 2020 இன் (The Direct Tax Vivad se Vishwas Act 2020) பிரிவு 3 இன் கீழ் வருமான வரி ரிட்டர்ன்களை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பில் சமீபத்திய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் வருமான வரித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.டி.ஆர் தாக்கலில் எதற்கான காலக்கெடு எவ்வளவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இந்த ட்வீட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன:
On consideration of difficulties reported by taxpayers & other stakeholders in electronic filing of certain Forms under the IT Act,1961, CBDT has further extended the due dates for electronic filing of such Forms. CBDT Circular No.16/2021 dated 29.08.2021 issued. pic.twitter.com/iOadU8ImUQ
— Income Tax India (@IncomeTaxIndia) August 29, 2021
புதிய வருமான வரி இணையதளத்தில் குளறுபடிகள் காரணமாக ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்ய இயலவில்லை என வரி செலுத்துவோர் பலர் புகார் செய்ததை அடுத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு குறித்த செய்தி வந்துள்ளது.
ALSO READ:ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதில் பெரிய நிவாரணம், விரைவில் அறிவிப்பு
புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள தவறுகளை கவனத்தில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கை வரவழைத்து பேசினார். முன்னதாக, வருமான வரித்துறை போர்ட்டலை உருவாக்கும் ஒப்பந்தத்தை அரசு இன்போசிஸுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை போர்ட்டலில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்ய நிதியமைச்சர் செப்டம்பர் 15 வரை இன்போசிஸுக்கு அவகாசம் அளித்துள்ளார். வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் போர்ட்டலில் தடையின்றி பணிபுரியும் வகையில், புதிய வருமான வரித்துறை இணையதளத்தின் தற்போதைய செயல்பாடுகளுடன் தற்போதுள்ள சிக்கல்களையும் நிறுவனம் 15 செப்டம்பர், 2021 க்குள் தீர்க்க வேண்டும் என்று அவர் இப்போது கோரியுள்ளார்.
ALSO READ: ITR Filing FY 2020-21: ITR தாக்கல் செய்யும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் செக்லிஸ்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR