தெலுங்கின் முன்னணி நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர். இவர் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படமானது நாளை மறுநாள் (12.5.22) வெளியாக இருக்கிறது.
இதனையொட்டி மகேஷ் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தி மொழியில் நடிக்குமாறு பல தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இந்தி சினிமாவில் நடித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எனக்கு தெலுங்கு சினிமாவிலேயே நட்சத்திர அந்தஸ்து ரசிகர்கள் அன்பு கிடைத்துள்ளது.
இன்னொரு மொழி படத்தில் பணியாற்றுவது குறித்து நான் யோசிக்கவே மாட்டேன். தெலுங்கில் பெரிதாக இன்னமும் என்ன மாதிரியான படங்களை செய்வது என்பதில்தான் எனது முழு கவனமும் இருக்கும்.நான் தெலுங்கில்தான் நடிப்பேன்.
மேலும் படிக்க | விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி
அந்தப் படத்தை ஒட்டுமொத்த இந்தியாவுமே பார்க்க வேண்டும் என விரும்புவேன். அது இப்போது நடப்பதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் நடிப்பதுதான் எனது பலம்” என்றார்.
மேலும் படிக்க | தோனியுடன் இணையும் நயன்தாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR