சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தியேட்டரா? OTT -ஆ? இதோ அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2022, 05:54 PM IST
சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தியேட்டரா? OTT -ஆ? இதோ அப்டேட் title=

சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’டான்’. சென்னை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. சூப்பர் சிங்கர் மற்றும் குக்வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த சிவாங்கி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், வெள்ளித்திரை அறிமுகமும் இந்த திரைப்படம் மூலமே அவருக்கு அரங்கேற உள்ளது. 

ALSO READ | பிப்ரவரி 3-ல் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்..! அதே அப்டேட் தான்..!

சூரி மற்றும் சரவணன் உள்ளிட்டோரும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி, காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ‘ஜலபுல ஜங்’ பாடல் யூடியூப்பில் இதுவரை 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷனும், லைக்கா புரொடக்ஷனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

ALSO READ | Ananya Pandey: 'அவ்வளவு கஷ்டமா இருந்தா தவிர்க்கலாமே'; ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!!

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்த திரைப்படம், எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, மார்ச் 25 ஆம் தேதி ’டான்’ ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரிலீஸ் தேதி பற்றிய தகவல் தயாரிப்பாளர் தரப்பிடம் இருந்து சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. ஏப்ரல் மாதங்களில் தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்கள் ரீலிஸாவதால், முன்கூட்டியே டான் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் போலவே இந்த திரைப்படத்துக்கும் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News