அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான 'புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1' திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. லீட் ரோலில் நடித்துள்ள அல்லு அர்ஜூனுடன், ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாள திரைப்பட உலகின் ஸ்டாரான ஃபகத் பாசிலுக்கு இந்த திரைப்படம் மூலம் முதன்முதலாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
ALSO READ | கொரோனா பரவல்; தள்ளிவைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்கள்
இந்நிலையில், திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை கடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சமந்தா ஆடியுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ ஐட்டம் சாங், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் பாட்டு ஒன்றே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், அதற்கு சற்றும் குறையாமல் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. புஷ்பா படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ALSO READ | ஹிந்தி, தெலுங்கில் வெளியான Valimai -ன் மிரட்டலான போஸ்டர்..!
அதன்படி, ’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படத்தின் பார்ட் 1, பிரைம் வீடியோவில் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 200 -க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் புஷ்பா படத்தை ஒடிடி யூசர்கள் பார்க்க முடியும். இதுகுறித்து பேசிய இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர் மெங்க்னானி, " புஷ்பா படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். அசரவைக்கும் சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை படத்தில் இருப்பதால், ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR