மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Last Updated : Nov 12, 2020, 06:25 PM IST
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்! title=

தளபதி விஜய் (Vijayநடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய உள்ள திரைப்படம் மாஸ்டர் (Master). இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 

ALSO READ | தளபதி விஜயின் master தீபாவளிக்கு ரிலீசாகுமா? பரபரப்பு

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கங்க செல்லம்’ என்ற வசனம் இருப்பதால் இந்த படத்தில் இடம்பெறும் வசனங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது.

ALSO READ | Master: தளபதி விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு விளக்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News