காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகள் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ்த்திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா என உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டியையும் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் இதுகுறித்து டிவீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா..? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே.
ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..
— Udhay (@Udhaystalin) April 17, 2018
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.